இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. விளையாட்டு நிபந்தனைகளை மீறி, மது போதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக திமுத் கருணாரத்னவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. கொழும்பு – கிங்சி வீதியில் கடந்த 31ஆம் திகதி திமுத் கருணாரத்னவின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில், திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். விபத்தில் முச்சக்கரவண்டி…
Read More







