ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசேஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர். ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம்….
Read More






