சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார். 2011 உலக கோப்பை கிரிகெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வாங்கியிருந்தார். இந்திய அணிக்காக 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டுள்ளார் யுவராஜ்…
Read More







