பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்? இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர…

Read More

சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயற்சி மையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியிலிருந்த 1 ஆசிரியர் உள்பட 15 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டுள்ள 3 மற்றும் 4-வது மாடிகளில் சுமார் 10 மாணவர்கள் சிக்கியிருந்தனர். தீயிலிருந்து தப்பிக்க அந்த மாடிகளிலிருந்து அவர்கள் கீழே குதித்துள்ளனர். பலர் மீட்கப்பட்டு…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அதிக தொகுதிகளை கைப்பற்றி  2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில், “பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

Read More

சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை

சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை…

Read More

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் கோடிக்கணக்கான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோன்று கடல் வழியாகவும் இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் கடத்தப்படுகிறது. இப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் படகிலிருந்து இந்திய படகிற்கு மாற்றி கடத்தலை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது….

Read More

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட…

Read More

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை…

Read More

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட். அதனால்தான் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்ற ‘நிச்சயமற்ற தன்மை’ கொண்ட விளையாட்டு என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தை அல்லது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் காண நேர்ந்தது. சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததாலும், அப்போது 70 ரன்களை கடந்த ஷேன் வாட்சன்…

Read More

இமயமலை பனிப்பொழிவில் சிக்கி பட்டினியால் மடிந்த மலை மாடுகள்

இமயமலை பனிப்பொழிவில் சிக்கி பட்டினியால் மடிந்த மலை மாடுகள்

கடுமையான பனிபொழிவில் சிக்கிக்கொண்டதால் சீனா உடனான இந்திய எல்லையில் அமைந்துள்ள இமையமலைப் பகுதியில் குறைந்தது 300 மலை மாடுகள் உணவின்றி, பட்டினியால் உயிரிழந்துள்ளன. வெள்ளியன்று, சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்குதாங் பள்ளத்தாக்கில் அந்த மாடுகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று ராஜ் யாதவ் எனும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதியில், சென்ற டிசம்பர் மாதம் முதலே அந்த மலை மாடுகள் சிக்கியிருந்தன. ஹெலிகாப்டர் மூலம் அவற்றுக்கு உணவைக் கொண்டு சேர்க்கும் அரசு அதிகாரிகளின் முயற்சி மோசமான வானிலை காரணமாக சாத்தியமில்லாமல் போனது. பல்லாயிரம் ஆண்டுகளாகவே இமயமலைப் பகுதிகளில் வாழும் இந்த மாடுகள் உணவு மற்றும் பால் தேவைகளுக்காக மட்டுமல்லாது பொதி சுமக்கவும்…

Read More

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடல்வழியாக ஒரு படகில் ஏராளமானோர் சென்றனர். துனிசியாவின் எஸ்பேக்ஸ் மாகாணத்தில் இருந்து 40 மைல் தூரத்தில் நடுக்கடலில் சென்றபோது திடீரென அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர். அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை மீட்டனர். இருப்பினும் கடலில் மூழ்கி 70 பேர் பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
1 171 172 173 174 175 256