ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி எந்த தகவலும் வெளியாகிவில்லை.
Read More









