பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழையால் போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி ‘வேகத்தில்’ கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. ஷதாப் கான் ‘சுழலில்’ வில்லியம்சன் (41) சிக்கினார். பின் இணைந்த பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம்,…

Read More

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார். போர் தாகம் இரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது. அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம்…

Read More

இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கூறியதாவது:- “இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான…

Read More

சென்னை தண்ணீர் பிரச்சனை

சென்னை தண்ணீர் பிரச்சனை

சென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். செம்மஞ்சேரியில் வசிக்கும் பலரும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை இந்த ஆண்டு சந்திப்பதாக தெரிவிக்கிறார்கள். இங்குள்ள மக்கள் தண்ணீர் சேகரிப்பதில் தங்களது நாளை தொடங்குகிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது. இளம் வயது தாயான சங்கீதா (28) தனது இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்ட பல இடங்களுக்கும் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது. ”காலை ஒன்பது மணிவரை பல இடங்களுக்குச் சென்று இரண்டு குடம் நீரை எடுத்துவந்து இரண்டு குழந்தைகளை…

Read More

அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது. அந்தவகையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது. இது 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும்…

Read More

கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு

கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தருண் குமார், அதே பகுதியில் எஸ்எம் ஜூவல்லரி என்ற நகை கடையை வைத்துள்ளார். நேற்று அவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள், நகை வாங்குவது போல நடித்து 150 கிராம் நகைகளை திருடி சென்றுள்ளார். அதில், ஒரு பெண் தருண்குமாரிடம் நகையை காட்ட சொல்கிறார். நகையை எடுக்க தருண்குமார் திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு பெண் சிறு பெட்டியில் இருந்த நகைகளை எடுத்து தனது பைக்குள் வைத்து கொண்ட பின் இருவரும் கடையிலிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் தருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இரண்டு…

Read More

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்தனர் & 35 பேர் காயம்

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து  25 பேர் உயிரிழந்தனர் & 35 பேர் காயம்

ஹிமாச்சல பிரதேச மாநிலம், குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது . இதில் 25 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Read More

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதும் கைகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்தார். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் சிகரமாக…

Read More

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

Read More

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுரா மாநிலத்தில் உள்ள உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா கூறி இருப்பதாவது: மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம்,ஐகோர்ட் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றும் திட்டங்கள் தொடங்கி வருகிறது. மேலும் அசாம்…

Read More
1 168 169 170 171 172 256