‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது
‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் — 2’ என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சதீஸ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது….
Read More









