10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ…
Read More









