அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. புதியதாக கொண்டு வரப்பட்ட ‘ரிசர்வ் டே’…

Read More

இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்

இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). இவரது மகள் சீதா(18). இவர் குன்றத்தூர், சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (19), என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2 மாதங்களாக காதலன் வீட்டிலேயே சீதா தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீதா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காதலன் வீட்டார் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read More

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. “இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார…

Read More

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும் ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை என திட்டமிட்டுள்ளார். மாறாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே 3 நாட்கள் தங்குவதற்கு இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.

Read More

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு ஒன்று தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா,…

Read More

“செவன்” – விமர்சனம்

“செவன்” – விமர்சனம்

நடிகர்: ஹவிஷ் நடிகை: ரெஜினா டைரக்ஷன்: நிசார் சபி இசை : நிசார் சபி ஒளிப்பதிவு : சைத்தன் பரத்வாஜ் நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார் நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார். இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி…

Read More

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம், சிறிய பவுண்டரி எல்லை என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார். கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்…

Read More

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் !! மான்செஸ்டரில் இந்திய அணியின் 269 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு திணறடித்து வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியதீவுகள் 50 / 2 !! இரண்டு விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத்தீவுகள் ரன்குவிப்பில் பெரிதும் தடுமாறி வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் அந்த அணி 50 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமியின் புயல்வேக பந்துவீச்சில் மேலும் ஒரு விக்கெட் மேற்கிந்தியதீவுகள் அணியின் விக்கெட்கீப்பர் ஹோப் முகமது ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்….

Read More

அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை எட்டினார். மான்செஸ்டரில் நடக்கும் விண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது 37 வது ரன்னை எட்டிய போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், 417 இன்னிங்சில் (டெஸ்ட்: 131 இன்னிங்ஸ், 6613 ரன்கள், ஒருநாள்: 224 இன்னிங்ஸ், 11124* ரன்கள், சர்வதேச ‘டுவென்டி-20’: 62 இன்னிங்ஸ், 2263 ரன்கள்) இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின்,…

Read More

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அது அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர்இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மும்பையில் இருந்து நெவார்க் நோக்கி புறப்பட்ட ஏஐ 191 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. லண்டன் விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், விமான ஓடு பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஏர்இந்தியா போயிங் 777 விமானம் 10.15 மணிக்கு திருப்பி விடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

Read More
1 167 168 169 170 171 256