ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு
அட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித். சமத்துவம் குறித்து தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா். பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா். இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில்…
Read More









