உலகம் செய்தி ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் ஏற்படும் சர்வதேச அரசியல் பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை தடுக்கும் வகையில், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்தன. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டார்.அதன் பயனாக, 2015ல், ஈரான் நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், ‘அணு ஆயுதம் தயாரிப்பதில்லை’ என்று, ஈரான்…
Read More









