36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதிலும் உள்ள 36,000 கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், கோயில் வளாகங்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். 8 வாரங்களுக்குள் கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

‘தவறு நடந்தது உண்மை தான்’: மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்

‘தவறு நடந்தது உண்மை தான்’: மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்

5 கோடி பேரின் தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருடப்பட்டது குறித்து மவுனம் கலைத்த அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், ‘தவறு நடந்தது உண்மை தான்’ எனத் தெரிவித்துள்ளார். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சுமார் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் பேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர்,…

Read More

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவில், பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவில், சமீபகாலமாக, பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. புளோரிடா மாகாணத்தில், ஒரு பள்ளியில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ௧௪ பேர் இறந்தனர். இதையடுத்து, வேகமாக பரவி வரும், துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க கோரி, நாடு தழுவிய அளவில், மாணவர்கள் இன்று பேரணி நடத்த உள்ளனர்.இந்நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தில் ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின், பள்ளி மூடப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில், எத்தனை பேர் காயமடைந்தனர், துப்பாக்கிச் சூடு…

Read More

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள்…

Read More

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கனடா உதயன் சர்வதேச விருதுவிழா -2018 ல் இந்திய சிறப்பு விருதினைப் பெறுவதற்காக வருகை தந்த புல்லாங்குழல் நவீன் அவர்கள் மறுநாள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோநகரில் உள்ள தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சியிலும் தனது திறமைகளைக் காட்டினார். சபையில் அமர்ந்திருந்த கர்நாடக சங்கீத ஆசிரியைகள் மற்றும் பிரதம விருந்தினர் வயலின் வித்துவான ஜெயதேவன் நாயர் மற்றும் சிறப்பு விருந்தினர் மிருதங்கவித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம் ஆகியே◌hர் நவீன் அவர்களை பாராட்டி நிற்க நிகழ்ச்சி தொடர்ந்தது.பிரதம விருந்தினர் வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் தனது உரையில புல்லாங்குழல் நவீன் அவர்களைப் பாராட்டி அவரோடு சேர்ந்து…

Read More

முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்!

முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில்,…

Read More

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More

Musical Night “Agni musical group with Navin” was huge success

Musical Night “Agni musical group with Navin” was huge success

Audiences really enjoyed with Agni’s rocking performance and Navin’s flute miracle action. This is about the greatest music concert that I’ve ever enjoyed. Beautiful music, beautiful performance. I recommend highly. Entire Agni group performed so well that you must to sit back and let the music flow all around you from Tamil Bc videos. Well worth owning. Tamil Bc Media believes it is one of the best instrumental performances of many beautiful songs in many…

Read More

உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினாலும், உண்மையாக எந்தஒரு மாற்றமும் கிடையாது. உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஹக்கானி நெட்வோர்க் மற்றும் தலிபான் அமைப்புகள் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அமெரிக்கா அங்கு தொடர்ச்சியாக வான்வழி தாக்குதலையும் மேற்கொண்டு…

Read More

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில்…

Read More
1 209 210 211 212 213 256