கியூபெக் சைவ மகாசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

கியூபெக் சைவ மகாசபை  விடுக்கும் முக்கிய அறிவித்தல்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வண்ணம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த எமது கியுபெக் சைவ மகாசபையின் 2017-2019 ஆண்டிற்கான நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது. சுபையின் தீர்மானத்தின்படி, ஆலய கீழ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டம் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கும் 10.00 மணிக்கும் இடையில் அங்கத்தவர்களின் வருகை கணக்கிடப்பட்டு, கோரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிற்பகல் 1.30 மணிவரை இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். இக் கூட்டத்திற்கு தவறாது சமூகமளி;க்கும் வண்ணம் கியூபெக் சைவ மகாசபையின் அங்கத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுகி;ன்றனர்.

Read More

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

நாளை 30ம் திகதி சனி;ககிழமை நடைபெறவுள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி 11120 Tapscott Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள “தமிழிசைக் கலாமன்ற” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டியம் மற்றும் பாரதி ஆர்ட்ஸ் இசைக்குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன. ஆதரவற்ற சிறார்களின் வாழ்வாதரத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 823 8588, 647 448 6869 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.

Read More

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்காவில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள். இந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல துறைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது. இது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக்…

Read More

கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும்  சிறு வணிகம் சார்ந்த   வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

நீங்கள் ஒரு சிறு தொழில், வணிகம் அல்லது தனியார் நிறுவனத்தின் (Private Corporation) உடைமையாளாரா? மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிறு வணிக வரி மாற்றம் உங்கள் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அரசு என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது, அதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் என்ன, அவைகுறித்துத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நம் ஒருமித்த கருத்துக்களை அரசிற்கும் தெரிவிக்கலாம் போன்றவற்றைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனத்தின் வணிகம் மற்றும் வரித்துறைகளில் அனுபவமிக்க நிபுணர் குழு விவாதத்தில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 30, 2017 காலை 8.30 மணிக்கு 1686 Ellesemere…

Read More

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை…

Read More

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

“கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு இருப்பது, இந்த இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவின் பலத்தையும் சகோதரத்துவத்தையும் நன்கு பிரதிபலிக்கின்றது” இவ்வாறு இன்று மதியம் ரொரென்ரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற “கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் இந்திய அரசு சார்பாக உரையாற்றிய கனடாவிற்கான இந்தியத் தூதுவர் திரு விகாஸ் ஸவர்ப் தெரிவித்தார். கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்;பதன் மூலம் இந்திய மக்களுக்கும்…

Read More

Gifford-Jones, “I Wish He’d taught me at The Harvard Medical School”

Gifford-Jones, “I Wish He’d taught me at The Harvard Medical School”

This week I interviewed Dr. Andrew Saul, an international authority on nutrition and vitamin therapy, and Editor of The Orthomolecular Medical News Service. Saul believes the greatest medical dangers today are the epidemic of obesity, Type 2 diabetes, overuse of prescription and over-the-counter drugs, and neglect of natural remedies. These, he says, will be the medical tsunami for our Health Care System. So I asked Dr. Saul to elaborate some of these pitfalls. Saul immediately…

Read More

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வெம்பிளி அரங்கில் நடைபெறுமென உலகெங்கும் தீவிரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. கனடாவிலிருந்தும் பாடகிகள் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் சரிகா சிவநாதன் ஆகியோர் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தான் போகன் திரைப்படத்திற்காக பின்னணி பாடிய “செந்தூரா” பாடலைப் பாடினார். கனடாவிலிருந்தும் உலகெங்கும் இருந்தும் பலரும் ரசிக்க முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான் மேற்படி இசை நிகழ்சசிக்கு எதிர்பார்ககப்பட்ட வண்ணம் மக்கள் பெருந்திரளாக வரவில்லை. அத்துடன் அதிகமான பாடல்களுக்கு (வாத்தியகருவிகள் மேடையில் குவிக்கப்படடிருந்தாலும்) வாத்தியக் கருவிகளிலிருந்து பின்னணி இசை வரவில்லை என்றும் சிடிக் கள் மூலமான இசையே…

Read More

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார்

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார்

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார் என்னும்சோகமான செய்தியை இங்கு பதிவு செய்கின்றோம் முதன் முறையாக லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஆரனல்ட் சான், மிகவும் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக விளங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடா உதயன் நடத்திய பல வைபவங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட அவர் தன்னைப் பீடித்திருந்த புற்றுநோயுடன் கடந்த பல மாதங்களாக போராடி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. Scarborough MP Arnold Chan—who used his final speech in Parliament to implore MPs to “elevate” their debate — has died after a battle…

Read More

நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்….

Read More
1 224 225 226 227 228 256