உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் அவசர எச்சரிக்கை: கடந்த வார இறுதியில்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவரினால் அவசர அவசரமாக இவ்வாறு ஒரு கிளை அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என்பதை தலைமையகம் உறுதியாக அறியத்தருகிறது. இலங்கையில் ஒரேயொரு கிளை மட்டுமே இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு அறிஞர்களையும், பேராசிரியர்களையும்…
Read More








