அமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் இலங்கைக்கு சாதகமாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையினை சமகால அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதனை இலங்கைக்கு நன்மையாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் இலங்கை தொடர்பில் நேரடி…
Read More









