நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு,” என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறியுள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், தனியார், ‘டிவி’ ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த, 2018ல், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து, அப்போது கட்சியின் தேசிய தலைவராக இருந்த, அமித் ஷாவை சந்தித்தோம். கட்சியின் வட கிழக்கு பிராந்திய செயலர் அஜய் ஜாம்வாலும் உடனிருந்தார். நாட்டின் பல மாநிலங்களில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது குறித்து, அஜய் ஜாம்வால் குறிப்பிட்டார். அதற்கு, ‘நேபாளம், இலங்கையிலும் பா.ஜ.,வுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும்’…

Read More

சுதர்ஷனா ஹோமம் உங்களுக்காகவும் உங்களின் குடும்பத்தினருக்காக்கவும் பிரார்த்தனை செய்து நடத்தப்பட்டது !!

சுதர்ஷனா ஹோமம் உங்களுக்காகவும் உங்களின்  குடும்பத்தினருக்காக்கவும் பிரார்த்தனை செய்து நடத்தப்பட்டது !!

சுதர்ஷனா ஹோமம் உங்களுக்காகவும் உங்களின்  குடும்பத்தினருக்காக்கவும் பிரார்த்தனை செய்து நடத்தப்பட்டது !! சுதர்ஷன காயத்ரியின் 1008 மந்திரம் உச்சரிக்க இந்த மிக சக்திவாய்ந்த சுதர்ஷன ஹோமத்தை பார்த்து அருள் பெறுங்கள் !!   சுதர்ஷன ஹோமத்தின் முழு வீடியோவையும் பார்த்து, உங்கள் வீட்டில் நடப்பது போல ஹோமத்தை முழு பக்தியுடன் அனுபவித்து, ஆசீர்வாதம், பாதுகாப்பு, வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அனுபவிக்கவும். நீங்கள் மந்திர உச்சாரத்தை 1008 முறை, அல்லது 21 முறை அல்லது 108 முறை முழு யாகத்தையும் கேட்டும்… அருளும்… பொருளும்… வெற்றியும்… பக்தியும் பெற்று மகிழுங்கள் !! கிளிக் செய்து… யாகத்தைப் பாருங்கள் … அருள் பெறுங்கள் & அனைவருடனும் பகிர்ந்து…

Read More

பிரபலமாகும் KOO செயலி – அரசியல்வாதிகளும்… சினிமா பிரபலங்களும் ட்விட்டரை விட்டு கூ வுக்கு தாவல் !!

பிரபலமாகும் KOO செயலி – அரசியல்வாதிகளும்… சினிமா பிரபலங்களும் ட்விட்டரை விட்டு கூ வுக்கு தாவல் !!

ட்விட்டரின் இடுகைகள் பதிவு அம்சங்களை கொண்டதாக கூ செயலி அறிமுகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்த செயலி அறிமுகமானது. இதை போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த செயலியை உருவாக்கியவர்கள் அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா. இருவரும் இந்தியர்கள். கூ செயலி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கிறது. பிளேஸ்டோரில் இதுவரை இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். கூ செயலி, தனது இணையதளத்தில் “இந்தியாவில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். சுமார் 100 கோடி பேருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களின் கரங்களில் செல்பேசி இருக்கிறது. இன்டர்நெட்டில் பெரும்பாலானவே…

Read More

தங்கள் நாட்டு பிரச்னை மீது தான் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆர்வம் !!

தங்கள் நாட்டு பிரச்னை மீது தான் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆர்வம் !!

‘இந்திய பிரச்னைகள் மீது அதிக ஆர்வம் காட்டும் இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்க பிரச்னைகளை, மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்’ என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கு மேல், இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். வாக்காளர்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனர். இந்நிலையில், இந்திய அமெரிக்கர்களின் செயல்பாடுகள் பற்றி, பென்சில்வேனியா பல்கலை உட்பட மூன்று நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:அமெரிக்கா தொடர்புடைய பிரச்னைகள், கொள்கைகளை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்திய அமெரிக்கர்கள், இந்திய விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, குடியேற்ற பிரச்னை உட்பட பல விவகாரங்களில், அமெரிக்காவை விட, இந்தியா மீது தான் அவர்கள்…

Read More

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்துள்ளார். காஸிப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும், மாபியா கலாச்சாரத்தினை ஒழிக்க எனது அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. முந்தைய அரசு, கிரிமினல்களையும், மாபியா கலாசாரத்தையும் வளர்த்ததினால் தான், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. புதிய உ.பி.,யில், மாபியாக்கள், கிரிமினல்கள், சமூக விரோத சக்திகளுக்கு இடமில்லை. வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மாபியா கலாசாரத்தை ஒழிப்பதிலும் அக்கரை காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின்  டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டில்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும்…

Read More

இந்து மதத்தினர் மீது விஷம் கக்குவது கூடாது என கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

இந்து மதத்தினர் மீது விஷம் கக்குவது கூடாது என கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸுக்கு ஐகோர்ட்  எச்சரிக்கை

‘மத பிரசாரம் செய்பவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது, மதத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்தும் போது, பொறுப்புணர்வு தேவை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம், அரியலுார் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில், புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், சில புகார்களில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் சி.லாசரஸ், மனுக்கள் தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ்…

Read More

பாக்கிஸ்தான் மீது ஈரான் சர்ஜிக்கல் தாக்குதல் !!

பாக்கிஸ்தான் மீது ஈரான் சர்ஜிக்கல் தாக்குதல் !!

பாகிஸ்தானில் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த தங்கள் நாட்டு வீரர்களை, ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது. பாகிஸ்தான் ஈரான் எல்லையோரம் உள்ள சிஸ்தான் பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் அதல் எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய வீரர்களை கடந்த 2018ம் ஆண்டு கடத்தியது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரில் 5 பேரை 2018ல் விடுவித்தது. பின்னர் 2019ல் 4 பேரை விடுதலை செய்த பாகிஸ்தான், மீதமுள்ள 2 பேரை விடுவிக்காமல் தாமதித்தது. அதுமட்டுமல்லாமல், 2019 பிப்ரவரியில் ஈரான் துணை ராணுவத்தினர் வந்த பேருந்து மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த…

Read More

கிறிஸ்டின் மிஸ்ஸானரி காருண்யா’வின் சட்டவிரோத கட்டுமானங்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்

கிறிஸ்டின் மிஸ்ஸானரி காருண்யா’வின் சட்டவிரோத கட்டுமானங்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்

கோவை அருகே காருண்யாநகரில், காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை மனுவை தாக்கல் செய்த வக்கீல் ரங்கராஜு கூறியதாவது:கோவை மாவட்டம், மத்வராயபுரம், பூலுவபட்டி, இக்கரை போளுவாம்பட்டி, ஆலாந்துறை ஊராட்சிகள் மற்றும் அவற்றை சுற்றிலும், கடந்த 10 ஆண்டுகளில், பல புதிய தேவாலயங்கள், பிரார்த்தனை மண்டபங்கள்…

Read More

இந்தியாவுக்கு எதிராக வெளி நாடுகளிலிருந்து சதி – ஜிஹாதி – காலிஸ்தானி தீவிரவாதிகளின் திட்டம் முசிறியடிக்கப்படும் !!

இந்தியாவுக்கு எதிராக வெளி நாடுகளிலிருந்து சதி – ஜிஹாதி – காலிஸ்தானி தீவிரவாதிகளின் திட்டம் முசிறியடிக்கப்படும் !!

‘சர்வதேச அளவில், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரசாரம் நடந்து வருகிறது’ என, எச்சரிக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல வெளிநாட்டு பிரபலங்கள், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.’பிரச்னை குறித்து முழுமையாக தெரியாமல், பொய்த் தகவலின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என, மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டாதம்பர்க், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அது குறித்து தகவல்கள் அளிக்கும், ‘டூல்கிட்’ என்ற தொகுப்பையும் அவர் வெளியிட்டார். அதை தன் பதிவில் இருந்து நீக்கிய அவர், புதியடூல்கிட்…

Read More
1 103 104 105 106 107 425