தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!

தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!

தி.மு.க.,வில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம், கட்சி தலைமை, 5 கோடி ரூபாய் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், போட்டியிட வாய்ப்பு கேட்டு, ஒவ்வொரு தொகுதியிலும், பலர், கட்சி தலைமைக்கு மனு அளித்துள்ளனர். சிலர், கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் சிபாரிசில், போட்டியிட முயற்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், தலைமைக்கு, 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன், தங்களின் தேர்தல் செலவுக்கு,…

Read More

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என அமெரிக்க பாடகி ரிஹானா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘யாரும் பேசப்போவதில்லை’ என்றும் ‘அவர்கள் விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்’ எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா…

Read More

மியான்மரில் ராணுவ ஆட்சி சூச்சி கைதால் பெரும் பதற்றம்

மியான்மரில் ராணுவ ஆட்சி சூச்சி கைதால் பெரும் பதற்றம்

மியான்மர் நாட்டில், அரசு நிர்வாகத்தை, ராணுவம் நேற்று அதிரடியாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி உட்பட பலரும் கைது செய்யப்பட்டதால், பெரும் பதற்றம் நிலவுகிறது. மியான்மரில், கடந்த நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் நடந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றி, ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி, அமோக வெற்றி பெற்றது. இது, 2015 பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.இதையடுத்து, தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வத்து…

Read More

அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல் !!

அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல் !!

அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன போலீசார்மீது கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர். அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து போலீசாரை தாக்கியதால் அவரை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில்…

Read More

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி பட்ஜெட்டில் திருக்குறள் !!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி பட்ஜெட்டில் திருக்குறள் !!

நடப்பு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இது நிர்மலாவின் தமிழ் ஆர்வத்தை காட்டுவதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லியில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து உரையாற்றினார். சென்ற ஆண்டு பட்ஜெட் உரையின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது அனைவரும் பாராட்டினர். கடந்த பட்ஜெட்டில், ‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’ – என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். ‛நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு,’ என்பதே இதன் விளக்கமாகும். அவரின் தமிழ் ஆர்வம்…

Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கொலையாளிகள் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கொலையாளிகள் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

டில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம்

டில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம்

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா் காயமுற்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்…

Read More

விவசாயிகள் போராட்டம் குறித்து பொய் செய்தி விளியிட்ட இந்தியா டுடே டி.வி.செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மீது நடவடிக்கை !!

விவசாயிகள் போராட்டம் குறித்து பொய் செய்தி விளியிட்ட இந்தியா டுடே டி.வி.செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மீது நடவடிக்கை !!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழந்ததில் பலியாயானர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சானல்களில் ஒளிரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், , நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர். உடனே தவறாக செய்தி ஒளிபரப்பியதை சர்தேசாய் ஒப்புக்கொண்டார் இதையடுத்து இந்தியா டுடே செய்தி சேனல் நிர்வாகம்…

Read More

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

டில்லியில் விவசாயிகள் பேரணியில், அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கிய கொடி ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட காலிஸ்தானி சீக்கிய தீவிரவாதிகள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசாருக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, சிலர் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் பேரணி நடத்தினர். டில்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை வரை நுழைந்து, அங்கு சீக்கிய மத கொடியை ஏற்றினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போது வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. டில்லியின் சாந்திவன் ரெட் லைட் பகுதியில் ஆயிரகணக்கானோர் கூடியதுடன், தடுப்புகளை டிராக்டர் மூலம் தகர்த்தனர். போலீசாரை தாக்கிவிட்டு…

Read More

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுபவர் டாக்டர் கபீல் கான். அப்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், 9 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான…

Read More
1 104 105 106 107 108 425