2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்
2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்’ டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் கொரோனா பரவும் சூழலில் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் அவசியமாகிறது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது COVID-19 RT-PCR கி்ட்டுகள் வாயிலாக நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை அறிய 24 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த…
Read More









