டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது !!
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரிசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நியூயார்க் – கனடா…
Read More









