டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா !!

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா !!

டில்லி ஆம் ஆத்மிகட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில தினங்களாக எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வழக்கமான பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

குமரன் குன்றம் முருகன் ஆலயம் – டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

குமரன் குன்றம் முருகன் ஆலயம் – டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

குமரன் குன்றம் முருகன் ஆலயதின் ஸ்தல புராணத்தை கூறி ஆலயத்தை தரிசனத்தோடு விளக்குகிறார் டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம் !! இந்த அழகிய மலை கோவில் சென்னையில் உள்ளது. கோவிலின் வரலாறு கேட்டுக்கொண்டே பகவான் சுவாமிநாதனை தரிசனம் செயுங்கள்… அனைவரோடும் முருக பெருமானின் இந்த அறிய வீடியோவை பகிர்ந்து கொண்டு… அருளாசி பெறுங்கள் !! முருகனுக்கு அரோஹரா !! கந்தனுக்கு அரோஹரா !! #KumaranKundram #Murugan #Swaminathan குமரன் குன்றம், குமரன் குன்றம் முருகன், முருகன் ஆலயம், தமிழ் உதயன், கனடா உதயன், டாக்டர் கைலாசம் சுப்பிரமணியம்

Read More

‘ஹிந்தி தெரியாது போடா’ பதில் ‛திமுகவேணாம்போடா’ – திமுக மொழி அரசியல் மண்ணை கவ்வுதா ?

‘ஹிந்தி தெரியாது போடா’ பதில் ‛திமுகவேணாம்போடா’ –  திமுக மொழி அரசியல் மண்ணை கவ்வுதா ?

‛ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக, சமூக வலைதளங்களில் ‛திமுகவேணாம்போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. No:1 ட்ரெண்டிங் #திமுகவேணாம்போடா #திமுக அடித்த பந்து அதே வேகத்தில் திரும்ப அடித்தவர்கள் பக்கமே வேகமா போய்க்கொண்டு இருக்கிறதா? கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய, திமுக எம்.பி., கனிமொழியை , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Read More

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும் !!

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும் !!

தன்வந்தரி யாகம் இந்த செப்டம்பர் 26 ஆம் தேதி செய்யப்படும், அனைவரின் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்யப்படும். ஆயுர்வேத மருந்து மற்றும் சிகிச்சை அனைத்தும் பகவன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்த்ரி பகவானுக்காக ஜெபித்தபின் தொடங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்தபோது, ​​தன்வந்திரியே அமிர்தத்தை எடுத்து வந்தார். தன்வந்தரி ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லா உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இந்த ஆண்டு இந்த நேரத்தில், உலகம் முழுவதும் சென்று வைரஸ் பரவுவதைப் பற்றி பயப்படுகிறோம் … இந்த சூழ்நிலையில், சங்கல்பம் மற்றும் ஹோமத்தில் உங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வரவேற்கப்படுகிறோம். பெயர், பிறப்பு நட்சத்திரம், கோத்திரம், ராசி (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை வழங்கவும்)…

Read More

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 . வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சேர்க்க அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று…

Read More

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா, நடிகை கங்கனா ரனாவத் இடையிலான மோதல் போக்கின் உச்சமாக, நடிகையின் அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, பால் தாக்கரே, கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாகவும், சிவசேனா கட்சியை ‛சோனியா சேனா’ எனவும் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாபியாக்கள் குறித்தும் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ‛மும்பை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ எனவும், ‛மும்பை பாதுகாப்பற்ற நகரம்’ எனவும் விமர்சித்திருந்தார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்…

Read More

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகிறது !!

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகிறது !!

இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வ விமானம் சென்றிருப்பது, ஒரு வரலாற்று நிகழ்வாகும். கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான முதலாவது முறைப்படியான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும் இது. இஸ்ரேலிய அதிகாரிகளோடு கூடவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் விமானத்தில் இருந்தார். விமானத்தில் இருந்து கீழே இறங்கிவரும்போது, “மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) க்கான புதிய அத்தியாயம் இது” என்று கூறினார். இந்த புதிய அத்தியாயத்தை எழுத உதவிய ஜாரெட் குஷ்னர் ( அவர் ஒரு யூதரும் கூட), இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எப்போதும் உடனிருந்தார். இந்த…

Read More

ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால் – கங்கணம் கட்டும் கங்கனா

ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால் – கங்கணம் கட்டும் கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பைக்கு வந்துள்ள நிலையில், இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம், நாளை உங்கள் அடாவடித்தனம் ஒடுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பிற்பகல் 3.40 மணியளவில் காணொளி வாயிலாக அவர் எதிர்வினையாற்றினார். அதில் “உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். காலம் மாறும், உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் அடாவடித்தனம் நொறுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உங்களுடைய செயல் கொடூரமானது, பயங்கரமானது” என்று கூறி காஷ்மீரி பண்டிட் நிலையை மேற்கோள்காட்டி கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார்….

Read More

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா ? இந்தியா என்பது, 28 மாநிலங்களும் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களும் சேர்ந்த, 543 லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 250 ராஜசபா(upper house) பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 140 கோடி மக்கள் தொகையையும் கொண்ட ஜனநாயக நாடு ! இதில், 39 லோக்சபா உறுப்பினர்களையும் மற்றும் 18 ராஜசபா உறுப்பினர்களையும் மற்றும் 8 கோடி மக்கள் தொகையில் 6.5 கோடி தமிழர்களை கொண்டது தான் தமிழ்நாடு ! இந்தியாவின் தேசிய இறையாண்மையை பாதிக்கும் விடையமாக,…

Read More

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்படும் – இலங்கை அரசு

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்படும் – இலங்கை அரசு

இலங்கையில் மாடுகளை வெட்ட தடை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை பார்லி., வளாகத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் பேசிய பிரதமர் ராஜபக்ஷே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்து உள்ளார் . விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவைடைந்த பின்னர் மேற்கண்ட தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறைச்சிகளை இறக்குமதி செய்யவும்முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Read More
1 120 121 122 123 124 425