அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போனை ஹேக் செய்து சவுதி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உளவுபார்த்ததாக வெளியான செய்தியை, சவுதி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி : கடந்த 2018 ம் ஆண்டு மே1 அன்று, ஜெப் பெசோசும், முகமது பின் சல்மானும் நட்பு அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அப்போது, பெசோசுக்கு வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை சல்மான் அனுப்பியுள்ளார். அதன் பின் ஒரு மணி நேரத்தில், பெசோஸ் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெசோசின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும் போது, பெசோசின் மொபைல் போனில் இருந்து…

Read More

இலங்கை அதிபர் ‘பகீர்’ – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் !!

இலங்கை அதிபர் ‘பகீர்’ – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் !!

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் போர்ச் சூழலில் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்படுகின்றனர். போரில் வெற்றி பெருவோர், மாயமானவர்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல், எப்போதும் மவுனமாகவே இருந்து வருகின்றனர். மாயமானவர்களின் உண்மை நிலை அறிய, பலரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் ஒரு கட்டத்தில், ஐ.நா.,வின் பார்வைக்குச் செல்கையில், ஐ.நா., தன் பிரதிநிதிகள் மூலம் விசாரணையைத் துவக்கும். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே, 30 ஆண்டுகளாக போர் நீடித்தது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

Read More

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன – மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன –  மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார். இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட,…

Read More

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற…

Read More

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

கனடாவில் தமிழரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில், கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினரும் மற்றும் Mr.தமிழ் கனடா அமைப்பினர் நடத்திய “Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ! பொங்கல் நிகழ்வானது, தமிழ் உழவர்களினால் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விரதமிருந்து கொண்டாடப்படும் நிகழ்வை, கனடாவில் இந்த அமைப்பினர் தமிழர்களாக தாம் பிறந்தும், தமிழரின் கலாச்சாரத்தை வேற்று இனத்தினருக்கு பிழையாக புரிய வைத்து, பணம் சம்பாதிப்பதற்காக “Beef & alcohol” கொடுத்து “மாமிச பொங்கல் இராப்போசன” நிகழ்வை நடத்தி, கனடியத் தமிழர்களையும் மற்றும் உலகத்தமிழர்களையும் அவமானப் படுத்துகின்றார்கள் ! இவ் நிகழ்வு மதம் சார்ந்தது அல்ல. தமிழை…

Read More

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது. வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இந்தத் தொடரை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். 31வது ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவுக்காக நிலைத்து நின்று விளையாடி, அதிகபட்ச ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். குல்தீப் யாதவின் பந்து வீச்சில் பௌல்டு அவுட் ஆகி அவர் பெவிலியன் திரும்பினார். இந்தியாவுக்காக ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதலில்…

Read More

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மத்திய, பா.ஜ., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தேசிய கல்வி கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், ‘நீட்’ தேர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் போராட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும், பா.ஜ.,வினர் இணைய தளத்தில் திருவள்ளுவரை காவி உடையில் படத்தை வெளியிட்ட போது, கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ‘தமிழகத்தை காவி மயமாக்க விட மாட்டோம்’ என்றும் பேசி வருகிறார். இதனால், தி.மு.க.,வினர் காவி நிற உடை அணிவதை கூட தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு, சென்னையில்,…

Read More

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

நடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து துக்ளக்…

Read More

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

திருவள்ளுவர் தினத்தை அவரை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழிலும், ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், Narendra Modi ✔ @narendramodi திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

Read More

விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

கோல்கத்தா துறைமுகத்தை தொடர்ந்து விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி, ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஜன.,12 அன்று நடைபெற்ற கோல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கோல்கத்தா துறைமுகத்திற்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான சுப்ரமணியன் சாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read More
1 151 152 153 154 155 425