இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறான விடயம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறான விடயம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம செய்தி ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் “வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும்,” என கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீர்வுத்திட்டம், தம்மிடமிருந்தே கிடைக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். தம்முடன் இணைந்து செயற்படும் பட்சத்தில், அதற்காக திட்டம் விரைவில் கிடைக்கும் என அவர் கூறினார். தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாகவே செயல்படும் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான திட்ட வரைவு, எதிர்வரும் நாடாளுமன்றத்…

Read More

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தோனேஷியா பண நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும். குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) தவறு ஒன்றும்…

Read More

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது. முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு. “காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது. இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….

Read More

நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் & 1 கோடி பேர் மேற்குவங்கத்தில்

நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் & 1 கோடி பேர் மேற்குவங்கத்தில்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உ.பி.,யில் சுட்டதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும் என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டது. இதில், பொதுச்சொத்துகள் பல சேதமடைந்தன. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் பேரணி நடந்தது. அதில் பேசிய மம்தா, மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப்…

Read More

யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

பாடகர் யேசுதாஸ் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு மோடி இன்று (ஜன.,10) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கே.ஜே.யேசுதாசுக்கு அவரது 80 வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ்பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.   Narendra Modi ✔@narendramodi On the special occasion of his 80th birthday, greetings to the versatile K. J. Yesudas Ji. His melodious music…

Read More

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது -தவறுதலாக நடந்திருக்கலாம்

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது -தவறுதலாக நடந்திருக்கலாம்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது. 176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார். இரான் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி…

Read More

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சன் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்சன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா ஜா கவின் தமிழகத்தின் மூத்த தலைவர் திரு H. ராஜா கேட்டுக்கொண்டார். குமரி மாவட்டம் நீங்கள் யாருக்காக வாக்களித்ததோ அவர்கள் தான் இன்று வில்சன் கொலையை கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சப் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்க

Read More

போலீஸ் அதிகாரியாக எதிரிகளை தனது பாணியில் துவம்சம் : தர்பார் – சினிமா விமர்சனம்

போலீஸ் அதிகாரியாக எதிரிகளை தனது பாணியில் துவம்சம் : தர்பார் – சினிமா விமர்சனம்

ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரெளடிகளை அடித்து நொறுக்கிய ரஜினி, மனித உரிமை ஆணைய பெண் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டி கையெழுத்து வாங்கி செல்கிறார். அப்போது தொடங்கும் ரஜினியின் பிளாஷ்பேக், அவர் சந்தித்த சவால்களையும், மகிழ்ச்சி தருணங்களையும் காட்டிவிட்டு நிகழ்காலத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது. எதுவும், யாரும் அசைக்க முடியாத மும்பை மாநகர போலீஸ் ஆணையராக ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தை ரஜினி நன்றாகவே கையாண்டுள்ளார்….

Read More

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

ஆஸி.,யில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதிக தண்ணீர் குடிப்பதாகக் கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5 நாள் திட்டத்தை துவக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, ஒட்டகங்களை கொல்வதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. அதிகளவு உணவு, குடிநீர் அருந்துவதாலும், உள்கட்டமைப்பை சேதப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாலும் ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரிதா பகர் என்பவர் கூறுகையில், ஒட்டகங்கள் தங்களுக்கு பெரிய தொந்தவு கொடுக்கிறது. எங்கள் வீட்டு மேற்கூரைகளை தட்டுகிறது. வீடுகளில் ‘ஏசி’க்களில் உள்ள தண்ணீரை குடிக்கிறது. இதனால், வெப்பம் அதிகரிப்பதுடன், அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் முதல்…

Read More

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது…

Read More
1 152 153 154 155 156 425