பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா

பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், பொது ஜன முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சஜித் பிரேமதேசா தோல்வி அடைந்ததும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Read More

நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது

நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரம சிங்கே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை, சமீபத்தில் பதவியேற்ற அதிபர் கோத்தபயா ராஜபக்சே, 70, பிரதமராக அறிவித்தார். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது. சமீபத்தில், இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே அபாரமாக வென்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பதவியில் இருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், புதிய அதிபர் கோத்தபயாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்து ரணில் ஆலோசனை நடத்தினார்.நேற்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்தார். அவர் கூறியதாவது:பார்லி.,யில் நமக்கு பெரும்பான்மை…

Read More

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தநிலையில், மோடியின் அழைப்பை ஏற்று…

Read More

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

தி.மு.க. நாளிதழான முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக பா.ஜ.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ‘முரசொலி அலுவலக இடத்தை அரசிடம் ஒப்படைத்தால் ௫ கோடி ரூபாய் தருகிறோம்’ என்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தி.மு.க. திட்டித் தீர்த்துள்ளது. ‘சென்னையில் முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலத்தின் பட்டா ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட்டதும் ‘மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்’ என ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என தமிழக அரசு பதில்…

Read More

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது…

Read More

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறினார்.இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார்.சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளிடம் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய. இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள…

Read More

இலங்கையில் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா அபார வெற்றி

இலங்கையில் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா அபார வெற்றி

இலங்கையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான அனுராதபுரத்தில் நடந்த விழாவில், அந்த நாட்டின் அதிபராக கோத்தபயா ராஜபக்சே, நேற்று பதவியேற்றார். சிங்கள மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிந்தாலும், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றப் போவதாக, அவர் உறுதி அளித்தார். அண்டை நாடான இலங்கையில், நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். அமோக ஆதரவுதன்னை எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கும்…

Read More

நேரில் வந்து மிரட்டி பாரு!: திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்

நேரில் வந்து மிரட்டி பாரு!: திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரில் வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் காயத்ரி. நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ‛‛நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறியதை திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்” என கூறியிருந்தார். இது தொடர்பாக நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும்,…

Read More

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார். பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

சிதம்பரம், 74, மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், இந்த முறைகேட்டில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ம் ஆண்டில், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும், சிதம்பரம் நிதி அமைச்சராகவும் இருந்தனர். நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அன்னிய முதலீட்டு வாரியம், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்ததாக கூறப்பட்டது. இதற்காக, கார்த்திக்கு சொந்தமான நிறுவனங்கள் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்…

Read More
1 160 161 162 163 164 425