இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி…

Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி புகார் பதிவு செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு மற்றும் போலீஸ் மாஅதிபர் ஆகியோரிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இந்த குண்டுத் தாக்குதல் கிட்டத்தட்ட அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டுமாறும் ஏரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். Image caption நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு…

Read More

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?

இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சித்தான் திமுக என்றும் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @BJP4TamilNadu கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை…

Read More

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்து போலீசிடம் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைஸ் முகமது (வயது 27). எம்.ஏ. படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்தார். பேஸ்புக்கில் வெவ்வேறு பெயர்களில் கணக்கு துவங்கி, பெண்களின் ஆபாச படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், கைஸ் முகமதுவின் பேஸ்புக் செயல்பாடுகளை கண்காணித்தனர். பெண்களின் புகைப்படங்களை தனது செல்போனில் இருந்து முகமது அப்லோடு செய்வதை சென்னை அம்பத்தூர் போலீசார் கண்டுபிடித்து உடனடியாக கைது…

Read More

சிவசேனாவுக்கு புது தலைவலி : ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவுக்கு புது தலைவலி : ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கு தங்கள் கட்சியின் ஆதித்யா தாக்கரேவை முதல்வராக நியமிப்பதற்காக பாஜ.,விடம் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக முன்னிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருவதால், புது சிக்கலில் சிவசேனா தலைமை தவிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ., – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. ஆனாலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவி ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இதனால், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தானே மாவட்ட எம்.எல்.ஏ.,வான ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா தரப்பில் முதல்வராக்க வேண்டும் என ஒரு…

Read More

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (வயது 32), வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த இரு நாட்களாக வங்காளதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை. அவருக்கு தடை விதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், அவரை இடைத்தரகர்கள் அணுகியது பற்றி உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றை ஐ.சி.சி. விதித்துள்ளது. இதனால் அவர்…

Read More

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

திப்பு சுல்தான் தொடர்பான அனைத்தையும் கைவிட உள்ளோம். திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ‘மைசூர் புலி’ என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான், ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி, காங்., கட்சி 2015 முதல் அவரின் பிறந்தநாளை (நவ., 10) கொண்டாடி வந்தது. ஆனால், அவர் ஒரு மதவாதி என பாஜ.,வை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கா்நாடக பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திப்பு சுல்தான் பற்றிய தகவல்கள் அனைத்தும் தவறானது. பலரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய அவர் சுதந்திர போராட்ட வீரரும்…

Read More

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25 மில்லியன் பரிசு

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25  மில்லியன் பரிசு

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து, அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு, $25 மில்லியன் பரிசு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தப்பிக்க முடியாத பாக்தாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்தார். அவரது உடலை, அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசியது. இந்நிலையில், பாக்தாதியை, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது குறித்து, அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:அல் பாக்தாதியின் இருப்பிடம், அவர் தங்கியிருந்த அறை,…

Read More
1 162 163 164 165 166 425