துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – டிரம்ப் அதிரடி
சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்தீஷ் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது….
Read More









