முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகள் இலங்கையில் ராஜினாமா
இலங்கையில் புத்த மதத்தினரும் கிறிஸ்தவர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் இரண்டு முஸ்லிம் கவர்னர்கள் நேற்று பதவிகளை ராஜினாமா செய்தனர். பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டதால் அதிருப்தியடைந்த ஒன்பது அமைச்சர்களும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 258 பேர் இறந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து முஸ்லிம்கள் மீதும் அந்த மதத்தினர் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் பெரும்பான்மை சிங்களர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கவர்னர்கள் இருவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புத்த…
Read More









