என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது: கிரண்பேடி

என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது: கிரண்பேடி

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, விரைவில் மாற்றப்படுவார் எனவும், புதிய கவர்னர் நியமன பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், 2016 மே 29ல், கிரண்பேடி, கவர்னராக பொறுப்பேற்றார். முதல்வர் நாராயணசாமிக்கு, ஜூன் மாதம் பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன், அவரது பொறுப்பு நின்றுவிடவில்லை. மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில், மிகவும் ஆர்வம் செலுத்தினார்.பொது மக்களிடம் நேரடியாக குறை கேட்பது, அதிகாரிகளை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்துவது, வார இறுதி நாட்களில் நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, உள்ளிட்ட பல பணிகளை கையில் எடுத்தார். இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது அதே நேரம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு,…

Read More

இலங்கையிலிருந்து லட்சத் தீவிற்கு சென்றார்களா ஐஎஸ் குழுவினர்? – விசாரிக்கும் கடற்படை

இலங்கையிலிருந்து லட்சத் தீவிற்கு சென்றார்களா ஐஎஸ் குழுவினர்? – விசாரிக்கும் கடற்படை

இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்தார். இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் இலட்சத் தீவிற்கு சென்றுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு சொந்தமான இலட்சத் தீவிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தி விடயங்களை ஆராய்ந்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். இலங்கையிலிருந்து…

Read More

மூன்றாவது குழந்தை ஓட்டுரிமை குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து – ஓவைசி கண்டனம்

மூன்றாவது குழந்தை ஓட்டுரிமை குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து – ஓவைசி கண்டனம்

மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாபா ராம்தேவ் செய்தியாளர்கள் சந்திப்பில், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும். அரசின் பிற சலுகைகளையும் பறிக்க வேண்டும். அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும். தற்போது எந்த வாக்காளர்களும் அரசு அளிக்கும் சலுகைகளை முழுமையாக பெறமுடியவில்லை. இவ்வாறு சட்டம் கொண்டு வந்தால் மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க மாட்டார்கள். அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி….

Read More

திருமலையில் குவியும் முதல்வர்கள்

திருமலையில் குவியும் முதல்வர்கள்

தேர்தல் முடிவு வெளி வந்து விட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, பல மாநில முதல்வர்கள் குவிந்து வருகின்றனர். நாட்டில், 17வது லோக்சபா தேர்தல், ஏப்ரல், 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடந்தது. நான்கு மாநிலங்களில், சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடந்து முடிந்தது. மத்தியிலும், மாநிலங்களிலும் புதிய அமைச்சரவை அமைய உள்ளது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று ஏழுமலையானை தரிசித்தார். அவரை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். அவரை அடுத்து, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஒய்.எஸ்.ஆர்.,…

Read More

சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயற்சி மையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியிலிருந்த 1 ஆசிரியர் உள்பட 15 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டுள்ள 3 மற்றும் 4-வது மாடிகளில் சுமார் 10 மாணவர்கள் சிக்கியிருந்தனர். தீயிலிருந்து தப்பிக்க அந்த மாடிகளிலிருந்து அவர்கள் கீழே குதித்துள்ளனர். பலர் மீட்கப்பட்டு…

Read More

லோக்சபா தேர்தலில் மகன்கள் தோல்வி; மகள்கள் வெற்றி

லோக்சபா தேர்தலில் மகன்கள் தோல்வி; மகள்கள் வெற்றி

லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சித் தலைவர்களின் மகன்கள் பலர், தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மகள்கள், வெற்றிக் கனியை தட்டிச் சென்றுள்ளனர். வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்றது, நம் நாடு. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரைத் தவிர, பெரும்பாலான தலைவர்களின் வாரிசுகள், பலமுக்கிய பதவிகளில் உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில், வாரிசுகள் தான், கோலோச்சுகின்றனர்.வாரிசுகள் பலர்சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வாரிசுகள் பலர் போட்டியிட்டனர். இதில், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகனும், காங்., தலைவருமான, ராகுல், அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அசோக் கெலாட்டின் மகன், வைபவ் கெலாட்டும், தோல்வி அடைந்தார்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த,…

Read More

பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்த அறி்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஹோமாகம நீதவானினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன்…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அதிக தொகுதிகளை கைப்பற்றி  2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில், “பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

Read More

‘கிங் மேக்கர்’ ஆசை நிராசையானது

‘கிங் மேக்கர்’ ஆசை நிராசையானது

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ‘கிங் மேக்கர்’களாக வர ஆசைப்பட்டு வலம் வந்த தலைவர்களின் ஆசை நிராசையாகிப் போனது. லோக்சபா தேர்தலில், எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே, தாங்கள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் தலைவர்கள் என்று வலம் வந்த மாநில கட்சி தலைவர்களின் ஆசை நிறைவேறவில்லை. பா.ஜ., தனியாகவோ 300 தொகுதிகளுக்கு மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி 350 எம்.பி.,சீட்களும் பெற்றதால், ‘கிங் மேக்கர்’களாக விரும்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் போனது. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் சந்திரபாபு நாயுடு, ராகுல், மாயாவதி, அகிலேஷ்…

Read More

பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி

பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி

நாடு முழுவதும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த சூழலில் மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கருத்துக்கணிப்பு பொய்யானது நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்., தலைவர் ராகுல் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். அவரது பிரதமர் கனவு பலிக்கவில்லை. லோக்சபா தேர்தல் ஏப்., 11ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதலே, பா.ஜ., கூட்டணி முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ்…

Read More
1 190 191 192 193 194 425