இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி
இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென இலங்கை ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்களத்திற்கு 150 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை…
Read More









