பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி

உ.பி., மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன.உ.பி.,யில், அகிலேஷ் மற்றும் மாயாவதி முதல்வராக பதவி வகுத்த காலத்தை விட, குஜராத்மாநிலத்தில், நான் அதிக காலம் முதல்வராக இருந்துள்ளேன்; மக்கள்,பிரதமர் பதவியையும் அளித்தனர்.ஆனால், அந்த பதவியையோ, அதிகாரத்தையோ, என் குடும்பத்துக்காக எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. ஏழ்மையில் இருந்த என் குடும்பம், பணக்காரர்களாக மாறவும் இல்லை. மக்கள் அளித்த அதிகாரத்தை, அவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது; ஆனால்,…

Read More

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடல்வழியாக ஒரு படகில் ஏராளமானோர் சென்றனர். துனிசியாவின் எஸ்பேக்ஸ் மாகாணத்தில் இருந்து 40 மைல் தூரத்தில் நடுக்கடலில் சென்றபோது திடீரென அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர். அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை மீட்டனர். இருப்பினும் கடலில் மூழ்கி 70 பேர் பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை…

Read More

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

`கொம்பன்’, ‘குட்டிப்புலி’, `மருது’, `கொடிவீரன்’ படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம். அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும். மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் கார்த்தி) அவரது சகோதரிகள் வளர்த்து, படிக்கவைக்கிறார்கள். வழக்கறிஞர் ஆகிறார் வெற்றி. அதே மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்) தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கும் நபர். கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்தபோது, கணேசனின் மகனை வெற்றி கொலைசெய்துவிடுகிறான். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன…

Read More

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21). இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர் டேவிஸ் பேட்டன் (வயது 23) பல்கலை கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு வந்த பேட்டன் அவரது அனுமதியின்றி ஜேடை கற்பழித்து விட்டார். தூங்கியெழுந்த ஜேட் தனது ஆடைகள் களையப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ந்துள்ளார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது ஜேடுக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தகவல்களை ஜேடின்…

Read More

தமிழகம் முழுவதும் மழை

தமிழகம் முழுவதும் மழை

மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் முதல், 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. தமிழகத்தில் இன்று(மே 9) 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த அனல் காற்றுக்கு நடுவே, சில பகுதிகளில், கோடை மழையும் கொட்டுகிறது. இன்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது….

Read More

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு கெடு

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு கெடு

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள்,நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கையில் பல இடங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உதவுவோரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் போலீசார் நடத்திய சோதனைகளில் பல இடங்களில் வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ‘பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள…

Read More

பாகிஸ்தானை விட்டு கனடா வந்தார் ஆசியா பீபி

பாகிஸ்தானை விட்டு கனடா வந்தார் ஆசியா பீபி

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த கிறித்துவ பெண் ஆசியா பீபி 12 மணிநேரங்களுக்கு முன்னால் பாகிஸ்தானைவிட்டு கனடாவுக்கு சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர் சாய்ஃப் உல் மாலூக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்ததை எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன. தனது பக்கத்துவீட்டு பெண்ணுடன் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார் என 2010ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார் ஆசியா. நாடு முழுவதும் இது முக்கியதுவம் வாய்ந்த வழக்காக…

Read More

இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைகள் அனைவரும்…

Read More

ஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்

ஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்

போனி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் ஒரு வருட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளார். சமீபத்திய புயலால் ஒடிசா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் பல சேதமுற்றுள்ளன. பெட்ரோல் பம்ப், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். 5 ஆயிரத்து 791 பள்ளிகள் சேதம். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒடிசாவுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு சார்பில் 17 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள…

Read More
1 193 194 195 196 197 425