கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திவருகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் இந்த தொகுதியில் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை அமமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சிறைப்பிடித்தநிலையில் போலீசார் வான் நோக்கிச் ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
Read More









