“இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு”: மனித உரிமை ஆணைக் குழு
முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திரிகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய…
Read More









