வடக்கின் சாதிப்பிரச்சினையேஅரசியல் தீர்வுக்குமுட்டுக்கட்டைஎன்ற ஜனாதிபதி மைத்திரியின் “சுத்துமாத்துப்” பேச்சு

வடக்கின் சாதிப்பிரச்சினையேஅரசியல் தீர்வுக்குமுட்டுக்கட்டைஎன்ற ஜனாதிபதி மைத்திரியின் “சுத்துமாத்துப்” பேச்சு

வடக்கில் சாதிப்பிரச்சினை தலைவிரித்தாடும் காரணத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தன புரபல்கலைக் கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் வடக்கில் நிலவி வரும் சாதிப் பிரச்சினை பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டு காலப் பகுதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவிதம் பற்றி திருப்தியா என ஆணையாளர் நாயகம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார். இதன்போது 50 வீதம் திருப்தி அடைவதாகதாம் பதிலளித்தாகவும் வடக்கில் நிலவிவரும் சாதிமுறைமை…

Read More

அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்

அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தாலும் இராணுவக் கொடியவர்களாலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகள், கற்பழிப்புக்கள், அங்கங்களை வெட்டி எறிந்து தமிழ்ப் போராளிகளை அங்கவீனர்களாக்கியமை ஆகியவை போன்ற கொடிதான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கா பலர் போராடுகின்றார்கள். இந்த நோக்கத்தோடு, உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் ஜெனவாவில் கூடியிருந்தும், ஆராய்ந்தும் தேவையான அமர்வுகளில் அதற்காககுரல் கொடுத்தும் வருகின்றார்கள். அதே போன்று இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்று வாதிட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டால்,  இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு காத்திருப்பவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கும் அனைத்து தரப்பினரும்…

Read More

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படாவிட்டால், சுமார் 15 வருடங்களில் இலங்கையின் வன வளம் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் எஞ்சியுள்ள 28 சதவீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பகுதிகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நடவடிக்கைகளினால்…

Read More

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா…

Read More

பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா

பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்த நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார். இதன்படி முதல் கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு: வாரணாசி – நரேந்திர மோடி ராஜ்நாத்சிங் -லக்னோ நாக்பூர் – கட்காரி காந்திநகர்: அமித்ஷா முசாபர் நகர்- சஞ்சீவ்குமார் மீரட்- ராஜேந்திர அகர்வால் பாட்பட்- சத்யபால்சிங் காஸியாபாத்; வி.கே.சிங் மும்பை: கோபால் ஷெட்டி அலிகார்- சதீஷ்குமார் மதுரா; ஹேமாமாலினி அமேதி: ஸ்மிருதி இராணி, ரேபரேலி; சந்தோஷ்குமார்…

Read More

தடம் – விமர்சனம்

தடம் –  விமர்சனம்

கதையின் கரு:  சிவில் என்ஜினீயரான அருண் விஜய்யும், நடுத்தர குடும்பத்து பெண் தான்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். நகரில் நடக்கும் ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்தும், உதைத்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில், என்ஜினீயர் அருண் விஜய் போன்ற உருவ ஒற்றுமை உள்ள இன்னொரு அருண் விஜய் குடிபோதையில் ரகளை செய்ததாக கைது செய்யப்பட்டு அதே போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறார். (இவரும், யோகி பாபுவும் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறவர்கள்) என்ஜினீயர், திருடன் இரண்டு பேரில், கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இறுதியில், உண்மையான கொலைகாரனை போலீசார்…

Read More

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கைபர் பக்துன்குவா மாகாண சட்டமன்ற உறுப்பினரான ஷேர் ஆசம் வாசீர் அவையில் பேசும்பொழுது, இந்துக்கள் எங்களுடைய எதிரிகள் என கூறினார்.  இவரது பேச்சுக்கு அங்கு சிறுபான்மை சமூக உறுப்பினர்களாக உள்ள ரவி குமார் மற்றும் ரஞ்ஜித் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும், வார்த்தைகளை தேர்வு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்ட வாசீர், இந்துக்கள் என்பதற்கு பதிலாக இந்துஸ்தான் (இந்தியா) என கூறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின், எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் நம்பிக்கையூட்டி மீண்டும் அவைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி ரவிகுமார் கூறும்பொழுது, பாகிஸ்தானுக்கு பகை நாடாக இந்தியா உள்ளது என்றாலும்,…

Read More

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை

சம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2007 பிப்ரவரி 18ம் தேதி, அரியானா மாநிலம் பானிபட் அருகே, சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து, 68 பேர் பலியாகினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தப் பேரணி, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் ஆரம்பமாகி, காந்தி பூங்கா வரை சென்றது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், போர்க் குற்றம் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையால் மட்டுமே நீதி கிடைக்கும்’…

Read More

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நகை வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை லண்டன் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது ஜாமீன் பெறுவார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கும். இந்நிலையில் லண்டனின் அவரை கண்டுபிடித்த…

Read More
1 202 203 204 205 206 425