கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்
கோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 14 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்தது. எனினும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த,…
Read More









