மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது
திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு அலங்கார பலகையை தற்காலிகமாக மீள அமைப்பதற்கு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் போலீசார் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மன்னார் நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயிலில் நான்கு நாள்களுக்குள் இந்த அலங்காரப் பலகையை தற்காலிகமாக அமைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து, மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து, இந்து குருமார் சங்கம் வெளியேறியது. திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அடுத்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்புப் பலகை, சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே இந்து குருமார்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. சர்வமத பேரவையில் தமக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையிலேயே, தாம் இந்த தீர்மானத்தை…
Read More









