இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது
கொழும்பின் புறநகர் பகுதியான மொறட்டுவை பகுதியிலிருந்து சுமார் 1800 மில்லியன் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய சமயத்தில் இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 3000கும் அதிகமான துப்பாக்கி ரவைகளும், கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 4ஆம் திகதி கைது…
Read More









