இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்

இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்

‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதுடன் முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளோம்’ என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ‘பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ‘மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் போல் நம் ராணுவமும் தாக்குதல்களை நடத்த வேண்டும்’ என சிலர் கருத்து கூறியிருந்தனர். இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலின் துாதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியான ரான் மால்கா கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல்…

Read More

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது என தகவல் வெளியாகியது. கூட்டணியில் காங்கிரஸ்…

Read More

பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும். இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ‘எழிலன்’ எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவிதான் அனந்தி சசிதரன். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,…

Read More

கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது என்று கருதப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற…

Read More

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர். அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன், அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி,…

Read More

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய…

Read More

அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி

அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்ததற்கு அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். இடைக்கால நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்து விட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி பற்றி…

Read More

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதிகள்…

Read More

இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்

இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், தற்போது உள்ள பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடிக்கும் என நம்புகிறார். இதுவரை உலகக் கோப்பை ஆறு போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தது இல்லை. உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ந்தேதி ஓல்ட் டிராபோர்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது குறித்து பாகிஸ்தான் ஜிடிவிக்கு அளித்த பேட்டியில் மொயின் கான் கூறும் போது, உலகக் கோப்பையில் இந்தியாவுடன் முதல் வெற்றியை பதிவு செய்வதில் தற்போதைய அணி மிகவும் திறமை வாய்ந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீரர்கள் (இந்தியா) தோற்கடித்ததால் நான் இதைச் சொல்கிறேன். ஜூன்…

Read More

நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் ‘பிளாக் பேந்தர்’ பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற சிறுத்தையை படம்பிடிக்கப்படும் முதல் சம்பவம் இதுவென கருதப்படுகிறது. அதிக தகவல்கள் இல்லாத இந்த விலங்கு பற்றி அடையாள முக்கியத்துவமான சில புகைப்படங்களே உள்ளன. கருஞ்சிறுத்தை (பேன்ந்தர்) பற்றிய வதந்திகளை கேட்போம். ஆனால், இதனை கறுஞ்சிறுத்தை (லெப்பேர்ட்) அல்லது கறுப்பு ஜாக்குவார் என்ற சொற்களால் கென்யாவில் அழைக்கின்றனர். வழிகாட்டி ஒருவரின் சொற்படி சிறுத்தையின் தடங்களை பின்தொடர்ந்த வில்…

Read More
1 208 209 210 211 212 425