மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார். லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர். அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார். அவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக…

Read More

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் – துருக்கி

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் – துருக்கி

சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இனத்தை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞரின் உயிரிழப்பை தொடர்ந்து சீனாவில் உள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் உய்கர் இனத்தை சேர்ந்த பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஷின்ஜியாங் பகுதியில் அப்தூர்ஹிம் ஹீயிட் எனப்படும் இசைக்கலைஞர் எட்டு வருட சிறை தண்டனை காலத்தில் இருந்தார். இந்த முகாம்களில் அவர்கள் உய்கர் இன மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த முகாம்கள் மறுவாழ்வு வழங்கும் கல்வி முகாம்கள் என சீனா தெரிவிக்கிறது. உய்கர் இன மக்கள் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் சீனாவின் வட மேற்கு…

Read More

சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்

சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்

மெக்சிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோவின் மோன்டரேயின் பேராயர் ரோஜிலியோ கப்ரேரா கூறும்போது, ”கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்” என்றார் . பிரேசிலுக்கு அடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்சிகோவில்தான். முன்னதாக, சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார். 2018-ல் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதை அடுத்து இந்த பிரச்சினை பெரிதானது. இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில்…

Read More

பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலை

பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலை

ராகுலால் பெருமளவு வாக்காளர்களை கவர முடியவில்லை என்று நினைத்த காங்., அவரது சகோதரி பிரியங்காவை கட்சிக்குள் கொண்டு வந்த பிறகு, அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆன பிறகு, உ.பி., சென்ற பிரியங்காவுக்கு அவர்கள் அளித்த வரவேற்பில் இது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கணவர் என்ற முறையில் வாத்ராவை பிரியங்கா ஆதரி்ப்பது, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியினர் அஞ்சுகின்றனர். சில மூத்த தலைவர்கள் இது பற்றி கூறியதாவது: வழக்குகளின் பிடியில் உள்ள வாத்ராவுக்கு ஆதரவாக இருப்பதாக பிரியங்கா அடிக்கடி காட்டிக்கொள்வதால், கட்சியின் இமேஜ் பாதிக்கப்படும். பிரியங்கா…

Read More

சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம்

சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம்

சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர். ரஜினிகாந்தின் அரசியல் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது அவரது இளைய மகள் சவுந்தர்யா திருமணம் குறித்து விசாரித்தபடி இருக்கிறார்கள். சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே திட்டமிட்டு, காதும் காதும் வைத்த மாதிரி இந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதனால் விழா தொடர்பான படங்கள் வெளியே வந்த பிறகுதான் இந்த நிகழ்ச்சி…

Read More

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின்…

Read More

டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, இன்று (பிப்.,11) முறைப்படி டுவிட்டரிலும் இணைந்துள்ளார். உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா, லக்னோவில் இன்று முதல் முறையாக பிரசாரத்தை துவக்கினார். சகோதரரும், காங்., தலைவருமான ராகுலுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தை துவக்கி அதே சமயத்தில், அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பிரியங்கா துவக்கி உள்ளார். பிரியங்கா டுவிட்டரில் இணைந்துள்ளதாக காங்., கட்சியின் மைக்ரோ பிளாக் பக்கத்தில் காலை 11.49 மணியளவில் தகவல் பதிவிடப்பட்டது….

Read More

அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம் ;(சிறுகதை) – முனைவர் ஆ.சந்திரன்

அழகாய்ப் பளிச்சிடும் பிம்பம்  ;(சிறுகதை)    –    முனைவர் ஆ.சந்திரன்

அண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். இல்லை! கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான். கல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன் வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்திருந்தாள். “சரிண்ணே! அகஸ்டியாவைப் பத்திரமாய்ப் பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள். “வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக! அவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில்…

Read More

நான் கல்வி கற்று எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

நான் கல்வி கற்று  எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

சகாயம் ஐஏஎஸ் கூறுகின்றார் “கிராமத்துப் பின்னணிதான் என்னுடைய இளமைக்காலம். இளமைக் காலம் நான் தமிழ் மீது தீராத காதல் கொண்டிருந்த காலம். அதைப்போல நான் கல்வி கற்று எந்தப்பதவிக்கு நான் சென்றாலும் நேர்மையாக நியாமாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சிய வெறி. இப்படியாக என்னுடைய இளமைக்கால பின்னணி அமைந்தது என்று நான் இன்னும் பெருமைப்;பட்டுக் கொள்வேன்” இவ்வாறு கூறுகின்றார் தமிழ்நாட்டின் மதுரை பிராந்திய முன்னாள் ஆட்சியராக விளங்கியவரும் நேர்மையான அரசுப் பணியாளரும், தமிழ் மீது பற்றுக் கொண்டவருமான சகாயம் ஐஏஎஸ் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” சஞ்சிகைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரம் வழங்கிய பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படிப் பேட்டியின் முழு வடிவமும்…

Read More

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள் காப்பாற்றியே ஆகவேண்டும்

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய  இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள்  காப்பாற்றியே ஆகவேண்டும்

கவிஞர் காசி ஆனந்தன் கூறுகின்றார்   “தமிழர்கள் தங்களுக்கு உலகில் இன்னமும் இவ்வளவு பெரிய கடந்த கால பேரழிவிற்குப் பின்பும் இரண்டு தாயகங்கள் இன்னும் தங்கள் கைகளில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு, தமிழீழம் என்ற அந்த இரண்டு தாயகங்களையாவது தாங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு செயல்படவேண்டும் என்று நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.” மேற் கண்டவாறு கூறுகின்றார் கவிஞர் காசி ஆனந்தன். எமது போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையுடனும் கைகளில் எழுதுகோலுடனும் ஒரு காலத்தில் உணர்வோடு பவனி வந்த “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன், தற்போது தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். இறுதிக் காலத்தில் வன்னிக்கு வருமாறு தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்திருந்தும், கவிஞருக்கு…

Read More
1 209 210 211 212 213 425