இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

அரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம்…

Read More

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

தற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார். திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள்…

Read More

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி

கலை வேந்தன் கணபதி இரவீந்திரன் அவர்களின் 65வது அகவை பூர்ததி மற்றும் கலை இலக்கிய மற்றும் பத்திரிகை துறை, நாடகத்துறை ஆகியவற்றில் மேற்கொண்ட பயணத்த்தின் 50வது ஆண்டு பூர்ததி விழா ஆகியன இன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது மண்டபம் நிறைந்த ஒரு மங்களமான விழாவிழாவாக நடத்தப்பெற்ற இந்த சிறப்பாக வைபவங்களில் கனடாவில் மொன்றியால், ரொரென்ரோ ஒட்டாவா ஆகிய நகரங்களில் வாழும் முக்கிய அன்பர்கள் நண்பர்கள் என மண்டபம் அதிர் அதிசியமான இந்த நிகழ்வு இடம்பெற்றது என்றால் மிகையாகாது. கனடா உதயன் செய்திப் பிரிவு நன்றி: ரஜீவ் -கெம்சோனிக்ஸ் பாதுகாப்பு கெமராக்கள் இணைப்பில் இணையில்லா நண்பர்; – உங்கள் புகைப்படங்களுக்காக..

Read More

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதல்

கனடாவில் வீடுகள் வாங்குவதற்காக மோட்கேஜ் கடன் பெறுதலும், வீடுகள் போன்ற ஆதனங்களை பொறுப்பாக வைத்து பணம் பெறுவதும்… அவற்றினால் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும்………….. மேற்கூறிய விடயம் என்பது கனடாவிற்கு புதியதல்ல. இங்கு வீடுகள் போன்ற ஆதனங்களை வாங்கும் போது எம்மிடம் உள்ள பணத்திற்கு மேலதிகமாக மோட்கேஜ் கடன் பெறுதல், பின்னர் அந்த பணத்தை தவணை மூலம் வட்டியுடன் சேர்த்து, பணம் பெற்ற வங்கிக்கோ அன்றி நிதி நிறுவனத்திற்கோ திருப்பிச் செலுத்துவது என்பது எத்தனையோ ஆண்டுகளாக இங்கு வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் இடம்பெறும் ஒரு விடயமாகும். ஆனால் அண்மையில் எமது தமிழர் சமூகத்தில் இடம்பெற்ற சில மோட்கேஜ் கடன் பெற்று அதனை மீளக்கட்ட முடியாமல…

Read More

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி

பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார். மோடி பேசியதாவது; இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல

Read More

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்

கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். இது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து…

Read More

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி பற்றி எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார். “நோக்கம் தவறானதாக இல்லாது…

Read More

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் 7 குழுக்களாக பிரிந்து விசாரணையை நடத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி, அதே கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது. அவ்வாறு செய்தால் 85% மதிப்பெண்களுடன் , பணமும் கிடைக்கும் என்றும், தனக்கு ஆளுநர் வரை செல்வாக்கும் உள்ளதாகவும் பேராசிரியர் பேசுவதும், அதற்கு…

Read More

சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடர்பான பணிகளிலும், மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் புளூடிக் வெரிஃபைடு குறியீட்டுடன் ரஜினிகாந்த் பக்கம் உள்ளது. பேஸ்புக் பக்கத்தில் தனது முதல் பதிவாக “ வணக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வணக்கம்! வந்துட்டேன்னு சொல்லு! என்ற பதிவையும் இட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் கணக்கு துவங்கி அவ்வப்போது சில தகவல்களை பதிவு செய்து வருகிறார். மக்கள் நீதி…

Read More

மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

கடந்த 1998 ம் ஆண்டில் இரண்டு அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து ஜோத்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ராஜ்ஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ”ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்” என்ற ஹிந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான்,52, சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை கோர்ட் 5…

Read More
1 267 268 269 270 271 425