ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில், எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இந்த போரில், ஏற்கனவே, நான்கு லட்சம் பேர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அந்நாட்டின் மக்கள் தொகையே பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும், சண்டை தொடர்கிறது.அதிபர் ஆசாத்தின் அரசுப்படை – போராட்டக்காரர்கள் – ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு என, மும்முனை போர் நடக்கிறது. கடந்த ஜனவரியில், இப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்கள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை, அரசுப்படை கைப்பற்றியது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு…

Read More

காவரி விவகாரம் மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவரி விவகாரம் மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட 4 வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்து விட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும்” * காவிரி வழக்கில் கர்நாடக மாநிலத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. “மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம் தெரிவித்திருந்தாலும் எங்கள் தீர்ப்பில் செயல்திட்டம் என குறிப்பிட்டுள்ளோம். வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது….

Read More

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையால், தமிழகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., இந்த பிரச்னையை வைத்து, தினந்தோறும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் நடைபயணம் துவங்கினார் ஸ்டாலின். முன்னதாக, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் கருத்தையும் ஸ்டாலின் அறிய முயன்றிருக்கிறார். சில எம்.எல்.ஏ.,க்கள் தவிர்த்து மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம். இல்லையென்றால், நடைபயணத்தின் போது, காவிரிப் பிரச்னைக்காக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்ற அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட இருந்ததாகக் கூறப்படுகிறது.

Read More

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கடந்தமார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. மொழிமற்றும் கலாச்சாரமையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்கு மானநடுவம் அமைப்புக்களுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்தது. ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் டீநடடநஎடைட நநகரில் தங்கியிருந்து இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில் டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசைஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி ,அவர்களின் பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக்…

Read More

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

கனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சிநிறுவனங்களில் ஒன்றானபைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நிறைவுற்றன. மேற்படிபாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு “பைரவி நுண்கலைக் கூடம்” நிறுவனத்தின் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு அவரது துணைவியார் மைத்துனர்மார் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், பெற்றோர் மாணவமாணவிகள் மறறும் ஊடகவியலாளர்கள் நடுவர்களாக பணியாற்றிய இசைக் கலைஞர்கள் ஆகியோர் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள். போட்டியில் கலந்துகொண்ட பாடகபாடகிகள் அனைவருமே “பைரவிநுண்கலைக் கூடத்தில் வாய்ப்பாட்டு தவிர்ந்த ஏனைய வாத்தியக் கருவிகள் கற்றுக்கொள்ளும் இசை ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளே ஆவார்கள். இவர்கள் அனைவரும் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்கள் வழங்கிய நம்பிக்கையும் ஊக்கத்தாலுமே…

Read More

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார். இதுகுறித்து காசா சுகாதார அமைச்சகம் தரப்பில், “காஸா – இஸ்ரேல் எல்லைப்புறத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீன நபர் ஒருவர் பலியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளது. பலியான விவரம் குறித்து பாலஸ்தீன அரசு வெளியிடவில்லை. பாலஸ்தீன குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல், “வான்வழித் தாக்குதல் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது. காசா – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் – காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின்…

Read More

பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு

பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு

பாராளுமன்றம் முடங்கிய நிலையில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் 23 நாட்களும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் முடங்கியது காரணமாக இந்த 23 நாட்களுக்கான சம்பளம் 3.66 கோடியை பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 400 எம்.பி.க்கள் தங்களுடைய சம்பள பணத்தை பெற மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார். பாராளுமன்றம் முடக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை…

Read More

மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

கடந்த 1998 ம் ஆண்டில் இரண்டு அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து ஜோத்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ராஜ்ஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ”ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்” என்ற ஹிந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான்,52, சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை கோர்ட் 5…

Read More

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால்…

Read More

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர்…

Read More
1 272 273 274 275 276 425