இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. ‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். “இந்தியர்களின்…

Read More

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச காலத்தின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. கொழும்பு துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்தது. ஏற்கெனவே பாகிஸ்தானின் குவாதர், மியான்மரில் கியான் பியூ, வங்கதேசத்தில் சொனடியா துறைமுக திட்டங்களை குத்தகை அடிப்படையில் சீனா மேற்கொண்டு வருகிறது. இதேபாணி யில் இலங்கையின் துறைமுக திட்டங்களில் சீனா கால் பதித்தது. தேவைப்பட்டால் இந்த துறைமுகங்களை ராணுவரீதியாக சீனா பயன்படுத்தும் என்று…

Read More

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தப்போது நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மெத்தன போக்கை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே கண்டித்து வந்தது. இதன் கராணமாக அமெரிக்கா – பாகிஸ்தான் உறவில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில், விமான நிலையத்தில் அப்பாஸி மீதான இந்தச் சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறும் போது, ”அப்பாஸி எளிமையானவர். பிற பயணிகளுக்கு எந்த நடைமுறை…

Read More

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இஸ்ரேல் நாட்டில் 4-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்த நிலையில் அவர் மீது ஏற்கெனவே 2 ஊழல் வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து 3-வது வழக்காக இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக பெசக் இஸ்ரேலி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக பெஞ்ச மின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் டெலிகாம் துறை விதிகளில் பெஞ்சமின் நெதன்யாகு மாற்றம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு…

Read More

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி…

Read More

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன், அவ்வப்போது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டு வந்தார். இதற்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை , வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கிம் ஜோங் உன், திடீரென சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுவெளியிட்டுள்ள செய்தியில், வட கொரியா அதிபர் ரகசியமாக சீன வந்தார். கடந்த 2011-ம்…

Read More

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

ரஷியாவின் உளவாளிகள் என 60 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என அமெரிக்கா கூறிஉள்ளது. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன்…

Read More

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். 1956 மார்ச் 23இல் உலகின் முதல் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ல் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில் இந்திய துாதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த கொண்டாட்டத்துக்கு, இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. நல்லெண்ண உறவுக்கு அழைப்பு விடுவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘இந்திய ராணுவ பிரதிநிதிகளை, அழைத்ததற்கு பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே விரும்புகிறது என காட்டத்தான்’ என்றார். அழைப்பை ஏற்குமாறு இந்திய…

Read More

‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும்: ஸ்மிருதி கிண்டல்

‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும்: ஸ்மிருதி கிண்டல்

பிரதமர் மோடி இந்தியர்களை உளவு பார்க்கும் பிக்பாஸ் என காங் தலைவர் ராகுல் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுலை கிண்டல் அடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இப்போதாவது என்சிசி பற்றி அறிய செய்ததற்காக நமோ ஆப்பிற்கு நன்றி சொல்லுங்கள் மதிப்பிற்குரிய ராகுல் ஜி. ஆப்கள் மூலம் தகவல்கள் கசியாது என்பது ‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும். உங்களுக்கு தெரியாதா ராகுல் ஜி. நாங்கள் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். காங்., சிங்கப்பூர் சர்வர்களுக்கு எதற்காக தகவல்களை அனுப்பியது என்பதற்கு பதிலளிப்பது பற்றி நீங்கள் அக்கறை காட்டுங்கள். அந்த சர்வர்களை நிர்வகிப்பது எந்த டாம், டிக் மற்றும்…

Read More

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் தீவிரவாத குற்றங்கள் அல்லது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்பட்டி, ஈராக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆயிரம் பேருக்கு மேல் போலீஸ், ராணுவம், குர்து படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகம் பேரை சிறை வைப்பதும், குற்றவாளி என விரைவாக முடிவு செய்வதும், தவறான…

Read More
1 274 275 276 277 278 425