பிரான்ஸ் ஐ.எஸ். தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; பயங்கரவாதி சலாக் அப்தேஸ்லாம் விடுவிக்க கோரிக்கை

பிரான்ஸ் ஐ.எஸ். தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; பயங்கரவாதி சலாக் அப்தேஸ்லாம் விடுவிக்க கோரிக்கை

பிரான்ஸ் நாட்டின் த்ரிபெஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதி புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளான். முன்னதாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போலீசாரை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்து உள்ளார். சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பயங்கரவாதி உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியை பாதுகாப்பு படை சுற்றி வளைத்து உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தி உள்ள பயங்கரவாதி 2015-ல் தாக்குதல் நடத்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான…

Read More

மக்கள் பிரச்னை தெரியாத ‛ரஜினி’- கருத்து கந்தசாமி ‛கமல்’: பன்னீர் விளாசல்

மக்கள் பிரச்னை தெரியாத ‛ரஜினி’- கருத்து கந்தசாமி ‛கமல்’: பன்னீர் விளாசல்

ஆட்சி ஒராண்டு கடந்து இருப்பது நம்மை எதிர்ப்பவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக உள்ளது என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார் சென்னையில் நடைபெற்ற முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழாவில்துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: எங்களுக்கு குழி பறிக்க நினைப்பவர்களை விடமாட்டோம்.தனக்கு வந்த சோதைனையை எதிர் நீச்சல் போட்டு கடந்து வந்துள்ளார் முதல்வர் பழனிசாமி . அவருக்குஉறுதுணையாக நிற்போம். கமல் ரஜினி மீது விமர்சனம் அரசியலுக்கு புதிது புதிதாக வருகிறார்கள். மக்கள் பிரச்னை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டம் பற்றி சிந்திக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும் சிலர் கருத்து கந்தசாமிகளாகவும் இருப்பதாக நடிகர் கமல் மீதும் குற்றம் சாட்டினார்….

Read More

முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறியது தொடர்பாக…

Read More

36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதிலும் உள்ள 36,000 கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், கோயில் வளாகங்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். 8 வாரங்களுக்குள் கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

‘தவறு நடந்தது உண்மை தான்’: மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்

‘தவறு நடந்தது உண்மை தான்’: மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்

5 கோடி பேரின் தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருடப்பட்டது குறித்து மவுனம் கலைத்த அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், ‘தவறு நடந்தது உண்மை தான்’ எனத் தெரிவித்துள்ளார். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சுமார் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் பேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர்,…

Read More

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவில், பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவில், சமீபகாலமாக, பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. புளோரிடா மாகாணத்தில், ஒரு பள்ளியில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ௧௪ பேர் இறந்தனர். இதையடுத்து, வேகமாக பரவி வரும், துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க கோரி, நாடு தழுவிய அளவில், மாணவர்கள் இன்று பேரணி நடத்த உள்ளனர்.இந்நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தில் ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின், பள்ளி மூடப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில், எத்தனை பேர் காயமடைந்தனர், துப்பாக்கிச் சூடு…

Read More

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

சிறப்பு செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை. சென்னை அண்ணா பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலை, தஞ்சாவூர் சாஸ்தா பல்கலை, சென்னை எஸ்ஆர்எம் பல்கலை, வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கழகம், சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மனித…

Read More

எம்.பி.,க்கள் சம்பளம் ‘கட்’: பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு

எம்.பி.,க்கள் சம்பளம் ‘கட்’: பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு

எம்.பி.,க்களின் கடும் அமளி காரணமாக தொடர்ந்து 13 வது நாளாக பார்லி.,யின் இரு அவைகளும் இன்றும் முடங்கி உள்ளன. இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து, தங்களின் பொறுப்புக்களை உணராமல், அவையை ஆக்கபூர்வமாக செயல்பட விடாமல் செய்யும் எம்.பி.,க்களுக்கு சம்பளம் தரக் கூடாது. வேலை செய்யாத எம்.பி.,க்களுக்கும் தண்டனையாக சம்பளம் தரக் கூடாது என பரிந்துரைத்து பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., கவிதா, அன்றாட பிரச்னைகள் குறித்து அரசு தினமும் விவாதித்தால் பார்லி.,யில் எந்த கட்சியோ எம்.பி.,யோ போராட அவசியம் இருக்காது. இருப்பினும் அரசு வேலை…

Read More

பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை: பல்வேறு இடங்களில் போராட்டம்

பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை: பல்வேறு இடங்களில் போராட்டம்

திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் மீறி, விஷ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் நுழைந்தது. மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதற்கு திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழையவிட மாட்டோம் எனவும் அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். இதனால், நெல்லை மாவட்டத்தில் மார்ச் 19 முதல் 23 வரை 5 நாட்களுக்கு…

Read More

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க முடிவு செய்து இருந்தார். இதன்படி, பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோல் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை துவங்கினர். சசிகலா தரப்பில் 15 நாட்கள் பரோல் கேட்கப்பட்டது. இதையடுத்து,  15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் செல்கிறார். கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே  இந்த முறையும்  விதிக்கப்பட்டு உள்ளது.

Read More
1 275 276 277 278 279 425