சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். கடந்த பல மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை 20.3.18 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75. சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடராஜன், இன்று 20.3.18 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் இறந்தார். அவரின் உடல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்திற்கு அஞ்சலிக்காவும் இறுதிச் சடங்கிற்காகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா…
Read More









