தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவில்லை. அதனால் தான் தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சிகளை பலப் படுத்துவதாக சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ராட்சி தேர்தலை எதிர் கொள்ளும் தமது கூட்டணியில் 80 வீதத்துக்கும் அதிகமான வேட்பாளர் கள் பொது அமைப்புக்களை சார்ந்தோரே எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர். எல்.எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இடையே உள்;ராட்சி தேர்தலில் போட்டியிடுவது…

Read More

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே  இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள், வீரர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ் வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளனர்.இது தான் எமது தலைவர்களின் இன் றைய துயரநிலை என்றும் தலைவர்கள் இந்த விடயத்தை பல்வேறு காரணங்களுக்;காக மறந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விடயத்தை என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள் ளார்

Read More

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறு மியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டு ள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமியை காணாத பெற் றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத் திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்து டன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும்…

Read More

யாழ்.மாநகர முதல்வராக அல்லது வடக்கு மாகாண முதல்வராவதற்கு சீ.வீ.கே. சிவஞானத்திற்கு சந்தர்ப்பம் கிட்டுமா?

யாழ்.மாநகர முதல்வராக அல்லது வடக்கு மாகாண  முதல்வராவதற்கு  சீ.வீ.கே. சிவஞானத்திற்கு  சந்தர்ப்பம் கிட்டுமா?

உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் வேட்பாளர் களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின் றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. ஊடகவியலாளர் வித்தியாத ரனை யாழ். மாநகர முதல்வராக நிறுத்துவ தாகவும் அண்மையில் தகவல்கள் வெளி யாகி இருந்தது.இந்த நிலையில் அடுத்த வருடம் வடக்கு மாகாண சபை காலம் முடிவுறவுள்ள நிலை யில் வடக்கு மாகாண…

Read More

உரும்பிராயில்,யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் சமூக செயற்பாட்டாளர் பரமநாதன் உயிரிழந்தார்

உரும்பிராயில்,யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில்  சமூக செயற்பாட்டாளர் பரமநாதன் உயிரிழந்தார்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சமூக செயற்பாட் டாளர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை யில் உயிரிழந்துள்ளார். பலாலி வீதி உரும்பிராயை சேர்ந்த சுப்பிரமணியம்பரமநாதன் (வயது 83) என்பவரே மேற் படி பரிதாபமாக உயிரிழந்தவராவார். திரு பரமநாதன் தனது மனைவி ஏற்கெனவே காலமான நிலையில், வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பலாலி வீதி ஊடாக உரும்பிராயில் உள்ள அவரது வீட்டுக்கு செல்வதற்காக யாழ் ப்பாணத்திலிருந்து இடது பக்கமாக துவிச்சக்கர வண்டியில் வந் துள்ளார். வலது பக்கமாக உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு வீதியின் மத்திக்கு சென்ற போது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர்…

Read More

இந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு

இந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடி க்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இரு ந்தது என்று, இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியா ற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித் துள்ளார். சண்டிகரில் அண்மையில் இந்திய இரா ணுவம் நடத்திய இராணுவ இலக்கிய விழா வில், இலங்கையில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இந்திய அமைதிப்படை முப்படைகளை யும் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை யின் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில், கடற்படை, விமானப்படையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. நாங்கள் ஏன் சென்றோம் என்பது குறித்த தெளிவான அரசியல் நோக்கத்தை இந்திய…

Read More

உள்ளூராட்சி தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றச்சாட்டுகின்றார்

உள்ளூராட்சி தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றச்சாட்டுகின்றார்

விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்ப ட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர். அன்றைய கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச…

Read More

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். வில்பத்து தேசிய சரணா லயத்துக்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உள்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்று கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம் 7 பேருக்கும் இந்தத் தண்ட னையை வழங்கியது.மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிமியன் சந்திரயோகி, சிறில் இராசமணி, முத்து மரிக்கார்…

Read More

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்கிறார் வி. ஆனந்தசங்கரி

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும்  என்கிறார்  வி. ஆனந்தசங்கரி

இரா.சம்பந்தன், மாவை சேனா திராசா மற்றும் சுமந்திரன் ஆகி யோர் அரசியலில் இருந்து விலகினால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் உள்;ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையி லான ஈ.பி,ஆர்.எல்.எவ் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஆனந்த சங்கரி தலைமையிலான தமி ழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள் ;ராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பதவி ஆசைகளும்…

Read More

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில்கடந்த பல ஆண்டுகளாக இயங்கும் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் வருடாந்தநத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் நகரில் நடைபெற்றது. இணையத்தின் தலைவி திருமதி பாமதி லிங்கராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மேற்படி விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சிலரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கமும் ஒருவர். மிகவும் அழகிய விழாவாக இடம்பெற்ற மேறபடி கொணடாட்டத்தில் இளம் மற்றும் குழந்தை நட்சத்திரஙகளின் கலை மற்றும் கல்வி சார்ந்த ஆற்றல்களைகண்டு நாம் வியந்தபடி ரசித்தோம். வர்த்தகப்பிரமுகர் ஏ.எம்ஆர் பலசரக்குமாளிகை திரு ராஜ்கோபால் உட்பட நான்கு சேவையாளர்கள் மேடையில் கௌரவிககப்பட்டார்கள். “அகரம்” வானொலி ஸ்தாபகர் திருமதிரஞ்சினி இரஞ்சன் அறிவிப்பாளராக பணியாற்றினார். மேற்படி விழாவில் மொன்றியால்…

Read More
1 296 297 298 299 300 425