விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக ஆ.கே.நகரின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். அவரது வேட்புமனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில் சுமதி, அதை தீபன் ஆகியோர் விஷாலை பரிந்துரைத்து முன்மொழிந்தனரா என்பதில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் தெரிவித்தனர். மாலையில் சில ஆடியோ ஆதாரங்களை என்னிடம்…
Read More









