ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜரானார் இலங்கை பிரதமர் ரணில்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா வர்த்தக நிலையங்களில் தீ : திட்டமிட்ட சதி முயற்சி என குற்றச்சாட்டு இலங்கை: காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்களும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான தாம் அறிந்த…

Read More

ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்யும் பாகிஸ்தானின் முடிவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் ஹபீஸ் சயீத் இருந்து வருகிறார். அவரது வீட்டுக்காவல் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவடைகிறது. அவரை விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘ஐநாவும், அமெரிக்காவும் பயங்கரவாதி என அறிவித்த ஒருவரை விடுதலை செய்யும்…

Read More

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை

முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சிக் கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் தரப்பு பயன்படுத்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. நீண்டகாலம் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் அணியில் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சின்னம் கிடைக்காதது, சசிகலா, தினகரன் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. * மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் , 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது….

Read More

வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை தவறானது: சீனா நிராகரிப்பு

வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை தவறானது: சீனா நிராகரிப்பு

வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை தவறானது என்று கூறி சீனா அதனை நிராகரித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து  அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும். வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் வடகொரியா வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங் கூறும்போது, ”உள்நாட்டு சட்டங்கள் மூலம் ஒரு தலைப்பட்சமாக பொருளாதாரத் தடை விதிக்கும் எந்த ஒரு நாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய பொருளாதாரத்…

Read More

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த, தல்வீர் பண்டாரி, 70, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ளது. பாக்., சிறையில் அடைபட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில்,இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஐ.நா., பொதுச் சபை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த சுற்றில், இந்தியா சார்பில் களத்தில் உள்ள, தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டன் வேட்பாளர், கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் கடும் போட்டி…

Read More

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது.  இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன், கால்நடை விலங்களுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாலித்தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா…

Read More

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA, which is the very biggest Media Organization in Canada, presented its Annual Awards Ceremony on November 17th, (Friday) at Toronto City Hall. The Lieutenant Governor of Ontario, Her Honour Elezabeth Dowdeswell was the Chief Guest of this colourful event. Many Community Leaders, Scholars and Journalists from different Ethnic Groups, were honoured at the event. Mr. Thomas Saras, the President and CEO of the NATIONAL ETHNIC PRESS AND…

Read More

கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்: அதிமுகவை கரைக்க திட்டமிடுகிறதா பாஜக?

கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்: அதிமுகவை கரைக்க திட்டமிடுகிறதா பாஜக?

கட்சி மாறி வந்தவர்களுக்குபாஜகவில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, முதல்வர் பழனிசாமி – ஓபிஎஸ் அணிகள் இணைப்பு, ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி என அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுல்லாது, அதிமுக வில் ஒரு பிரிவினரே குற்றம்சாட்டி வருகின்றனர். மத்தியிலும், 15-க்கும் அதிகமான மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் 3 சதவீத வாக்குகளுக்குமேல் பெற முடியவில்லை. எனவே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி பாஜகவை…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி வாக்காளர்களை களைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைதேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் பணி துவங்கிய…

Read More

எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல: தீபிகாவுக்கு கமல் ஆதரவுக் குரல்

எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல: தீபிகாவுக்கு கமல் ஆதரவுக் குரல்

பத்மாவதி பட சர்ச்சை தொடர்பாக நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் வலுத்துவரும் நிலையில், ”எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல” என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. வரலாற்றைத் திரித்துக் கூறியிருப்பதாக ரஜபுத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், திரைப்பட வெளியீடு தடைபட்டுள்ளது. இதற்கிடையில், பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. உச்சபட்சமாக, அவரது தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தார் ஹரியாணா பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளர். இதைச் சுட்டிக்காட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில், நடிகை…

Read More
1 302 303 304 305 306 425