Author: netultim2
ASSOCIATION OF SRILANKAN GRADUATES OF CANADA
GUIDANCE FOR HIGHER STUDIES AND CAREER INFORMATION WORKSHOPS -2017 For High Schools Students(GR 9-12) and Parents இணைந்து நடாத்தும் உயர்கல்விக்கான வழிகாட்டல் பட்டறைகள்- 2017 இரு இடங்களில் Saturday. 4 .2017 ———————- Saturday.November 11 20179:30 AM –2:30 PM ————————– 9:30 AM- 2:30 PM Middlefield Collegiate Institute —– ——— — — Central Peel Secondary School 525 Highglen Avenue(Middlefield Road) —— —- 32 Kennedy Road North(Queen StreetEast) Markham On-L3S 3L5 —————————- Brampton On L6V 1X4 உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்வதற்குப் பின் வரும்…
Read More“நான்காவது பரிமாணம்” நடத்திய இறுக்கமான இலக்கிய விழா
பரதேசம் போனவர்கள் (சிறுகதைகள்- எழுத்தாளர் க. நவம்), படைப்புக்களும் பார்வைகளும் (கலை இலக்கிய மதிப்பீடுகள் – க. நவம்) இயற்கையுடன் வாழுதல் (ஆரோக்கியம் சார் கட்டுரைகள் -சியாமளா நவம் – எழுத்தாளர் நவம் அவர்களின் துணைவியார் ), தடங்களைக் கடந்து செல்லும் காலநதி (கமூக அரசியல் பண்பாடு சார் கட்டுரைகள் (க. நவம்) ஆகிய மேற்படி நான்கு நூல்களின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 28ம் திகதி மாலை 3.00 மணிக்கு ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சி எம் ஆர் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பிரசாந்த் விழாவைத் தொகுத்து வழங்கினார். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட…
Read Moreபாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது எதிர்கால உயர்விற்காக உயர் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பலர் தொடர்ச்சியாக போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றார்கள். அவர்கள் போராடுவது தமக்காக அல்ல. யாருக்காக என்று அவர்களே கோசமிடுகின்றார்கள். கேட்டுப்பார்ப்போம். “எமக்காக போராடியவர்கள் உயிருடன் போராட நாம் வீட்டுக்குள் கிடப்பதா?;… தமிழ் அரசியற் கைதிகளுக்காக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தயாராவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக ஓரணியில் அணிதிரண்டு வருமாறு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். கடந்த முப்பத்தொன்பது நாட்களாக மூன்று தமிழ் அரசியற் கைதிகள் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தில்…
Read More‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்
வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் மழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தனது கவலையைக் குறிப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில், “சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர்வரத்து பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது….
Read Moreஉயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மழைக்காக, வறட்சியை தீர்க்க தண்ணீர் வராதா என்று ஏங்கினோம். இன்று மழை வந்தாலும் இது போன்ற துயரங்கள் இரண்டு குழந்தைகளை இழந்து வாடும் மீளா துயரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று கூறுகிறார்களே? தண்ணீர் தேங்கவில்லை என்பது எல்லா இடங்களிலும் இல்லை, வேலை நடந்துள்ளது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே தீர்வாகாது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல்…
Read Moreவீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை: ‘‘எங்கெங்கு காணினும் தண்ணீரடா… ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையே’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சென்னை மாநகரம் தான். வட கிழக்குப் பருவமழையின் தொடக்க நாளிலேயே சென்னை மாநகரம் மிதக்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தாலும் அதை நாம் பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறுவது வருத்தமளிக்கிறது. சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 200 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக…
Read Moreமத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் கீழடியில் அகழாய்வு: ஜனவரியில் தொடங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
கீழடியில் மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் வருகிற ஜனவரியில் ஆய்வு நடத்தும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் உடன் இருந்தார். அவர்களிடம் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், உதவி தொல்லியலாளர் வீரராகவன் ஆகியோர் ஆவணப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கினர். அதற்குப்பின், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு சர்வதேச கவனம் பெற்றுள்ளது. கீழடியில் கடந்த மூன்றாண்டு காலம் நடந்த அகழாய்வில் 7,518…
Read Moreஅமெரிக்கா, லண்டன் போல் மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி பேச்சால் வாக்குவாதம்
சென்னையில் மழைநீர் வடிகால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்குமே மழைநீர் தேங்கவில்லை, அமெரிக்கா போன்று லண்டன் போன்று சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அமைச்சர் எஸ்.பி.வேலு பேசியதை அடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் வேலுமணி திணறினார். சென்னை மாநகராட்சியில் இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார். ”தமிழக அரசு முதல்வர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை, ஒரு சில இடங்கள் அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எதுவுமே…
Read Moreகுறைந்த வரியில் ஆதாயம் தேட முயற்சி: உயர் ரக கார்களை புதுச்சேரியில் பதிவு செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் – அமலா பால், பகத் பாசில் உள்ளிட்டோர் சிக்குகின்றனர்; விசாரணை நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவு
வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். அத்துடன் ஃபேன்சி நம்பரை புதுச்சேரியில் ஏலம் முறையில் பெறலாம். அதற்கு அதிகளவாக ரூ.50 ஆயிரம் வரைதான் செலவாகும். இப்பணியை செய்து தருவதற்காக தனியே புரோக்கர்கள் இருக்கிறார்கள். புதுச்சேரியில் நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் ரக ‘பென்ஸ் எஸ் கிளாஸ்’ ரக காரை வாங்கியுள்ளார். இதன்…
Read More









