மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்
மயிலாடுதுறையில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படம் விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்….
Read More









