இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால்   சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை கடந்த திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பிரதானமாக சோற்று பார்சல்,தேநீர் மற்றும் சிறிய வகை உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்களின் விலைகளை எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்பது தொடர்பாக இது வரை தீர்மானிக்கவில்லையெனவும் இது தொடர்பாக விரைவில் தீர்மானம் மேற்கொண்டு அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று நள்ளிரவு…

Read More

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீஎன்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா…

Read More

தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து அவர்களது வாரிசாக ராகுல் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். 46 வயதாகும் ராகுல்காந்தி 2004-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அந்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அமேதி தொகுதியில் தொடர்ந்து எம்.பி. ஆக இருந்து வரும் ராகுல் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார். 2013-ம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராகுலை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக்க…

Read More

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்…

Read More

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவர் மேகாலயா மாநில ஆளுநராக இருந்தவர். ரோசய்யா பதவிக்காலம் முடிந்தபின்னர் தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்துவந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான இவருக்கு தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது மறைவு, அதிமுக பிளவு என அடுத்தடுத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வர்டு பிளாக்,…

Read More

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. நாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர். இது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத்…

Read More

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஓ. பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை…

Read More

கியூபெக் சைவ மகாசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

கியூபெக் சைவ மகாசபை  விடுக்கும் முக்கிய அறிவித்தல்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வண்ணம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த எமது கியுபெக் சைவ மகாசபையின் 2017-2019 ஆண்டிற்கான நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது. சுபையின் தீர்மானத்தின்படி, ஆலய கீழ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டம் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கும் 10.00 மணிக்கும் இடையில் அங்கத்தவர்களின் வருகை கணக்கிடப்பட்டு, கோரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிற்பகல் 1.30 மணிவரை இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். இக் கூட்டத்திற்கு தவறாது சமூகமளி;க்கும் வண்ணம் கியூபெக் சைவ மகாசபையின் அங்கத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுகி;ன்றனர்.

Read More

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

நாளை 30ம் திகதி சனி;ககிழமை நடைபெறவுள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி 11120 Tapscott Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள “தமிழிசைக் கலாமன்ற” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டியம் மற்றும் பாரதி ஆர்ட்ஸ் இசைக்குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன. ஆதரவற்ற சிறார்களின் வாழ்வாதரத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 823 8588, 647 448 6869 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.

Read More

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்காவில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள். இந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல துறைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது. இது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக்…

Read More
1 314 315 316 317 318 425