தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி
தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று ‘கருப்பன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் ‘கருப்பன்’. என் மனைவியாயக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’ வெளியாகும்…
Read More









