கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி

கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி

அ.தி.மு.க. அம்மா அணி யில் உள்ள 122 எம்.எல்.ஏ.க் களில் பெரும்பாலானவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 37 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறார்கள். கட்சியையும், ஆட்சியையும் யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பலப்பரீட்சையால் அ.தி.மு.க. அம்மா அணியில் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் கவலையோடும் வேதனையோடும் இந்த பரபரப்பு நிகழ்வுகளை உற்றுப் பார்த்து வருகிறார்கள். இதையடுத்து தினகரன் முதலில் தலைமைக் கழகத்துக்கு வராமல் மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. 4 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தினகரன், முதலில் தெற்கு…

Read More

அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 22, 23, 24 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கட்சி யின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் வரும் அவர், கட்சியின் மாநிலத் தலைவர் முதல் கிளை கமிட்டி தலைவர் வரையிலான நிர்வாகி கள், தொண்டர்களுடன் உரையாட வுள்ளார். நாடெங்கும் தனது செயல் திட்டத் தால் வெற்றிக்கனியை பறித்து வரும் அமித்ஷாவின் வருகை தமிழக பாஜக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவரது வருகை யால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. அமித்ஷா வின் வருகை தமிழக அரசியலில் நேர்மறையான…

Read More

சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சிலை நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன். மனதிலும் பதிந்தவர்….

Read More

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க சென்னைக்கு வருமாறு தனது அணி சார்ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் தினகரன் அணி என 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், சிறை சென்று திரும்பிய தினகரன், மற்ற இரு அணிகளும் இணைவதற்கு 60 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) வரை காலக்கெடு விதித்தார். அத்துடன், ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு வரப்போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள், நாளை (சனிக்கிழமை) சென்னை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்….

Read More

ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா

ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா

கனடா ஸ்காபுறோ நகரில்80 (E) நாஸ்டின் வீதியில் யுனிட் 99 ல் அமைந்துள்ள “மேல்மருவததூர் ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 1.00 வரை பக்தி பூர்வமாக நடைபெற்றது. செவ்வாடை அணிந்த சக்திகள் ஆண்களும் பெண்களுமாக ஆலயத்தை வந்தடைந்து, அமைதியாகவும் மருவத்தூர் அம்மா வழிபட்ட வணணமும்அமைதியாக அமர்ந்திருந்து ஒவ்வொரு பூசை மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் பேணி பின்னர் கஞ்சிக் கலசம் தாங்கி வீதி வலம் வந்தனர் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இடம்பெற்ற கஞ்சிக் கலசம் தாங்கும் பவனி பார்ப்பதற்கு பக்தி பூர்வமாக காணப்பட்டது. ஓம் சக்தி! பராசக்தி! ஒம் சக்தி! பராசக்தி! என்ற மனது உருகும் அம்மையின் வரிகள் அனைவருக்கும்…

Read More

செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி

செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி

Solo Dance Event by Miss Swetha Pararajasingam was a successful one. Swetha is a Student and daughter of Mrs Nirothini Pararajasingam, Founder of Nirthiya Kalanjali Academy of Fine Arts. Madhurai Sri Muraleetharan Master and his musicians team played an important role of this Solo Dance. Swetha was given a title today Youth Advocate, by Harvard University Tamil Chair Inc Dr. Sampantham, Mr (Writer) A. Muthulingam and Mr. Sivan Ilango jointly presented the Certificate to Swetha Nirothini Pararajasingam மாலை…

Read More

உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

இவ்வருடம் இரு தினங்கள் இரு இடங்களில் ! செப்டம்பர் 2, 2017ஸ்காபரோவிலும்,- செப்டம்பர் 3, 2017, மொன்றியல் நகரிலும்! நண்பர்களே, பல்வேறு கலைஞர்களும், பேச்சாளர்களும் பங்கேற்கும் இந்த கலை பெருவிழாவில் .. புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா (பட்டிமன்றம் ராஜா) அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் ..விருந்தினராகவும் கலந்து கொண்டு கெரவிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்காபரோவிலும், மொன்றெளிலும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதியில் நடக்கவிருக்கும் இந்த உதயனின் 2017 பல்சுவை கலை பெருவிழாவில் தாங்கள் அனைவரும் கலந்துக்கொடு, ரசித்து மகிழ்ந்து .. தமிழரின் வெற்றி பெருவிழாவாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கீழ்கண்ட வீடியோவில் கனடா உதயனின் தனமை ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம்…

Read More

அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு?

அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு?

60 நாட்கள் கெடு முடிந்து வருகிற 5-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் செல்ல போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. டி.டி.வி.தினகரன் தனது வியூகத்தை தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார். இன்று மாலை அவர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பத்திரிகைத் தொடர்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு எத்தகைய அதிரடியான பதிலடியை கொடுப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. எனவே…

Read More

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் சிலைக்கு அருகில் பகவத் கீதையை வைத்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ”கலாமுக்கு நினைவு மண்டபம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல சிலை எதற்கு? பக்கத்தில் பகவத் கீதை எதற்கு? திருக்குறளை விட சிறந்ததா பகவத் கீதை? நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உறுதியோடு தமிழக அரசு இருக்க வேண்டும். பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வரும் என்கிறார்கள். இத்தகைய சூழலில் செப். 15-ல் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார் வைகோ.

Read More

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:- எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள்? சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே? சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே? பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான்…

Read More
1 325 326 327 328 329 425